Paithiyamanen unnale
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Paithiyamanen unnale vaithiyanatha
bavavinai theerndhen unnale oh gurunadha
niththiyamaam vaazhvu enru ninainthirundhene
nee adhai poi enraay enai unarndhene
saththiyaththin saatchi enru unai kandene
shankaran thaan kaappavan enru uruthi poondene
thathuvathin thaayagam unnai potriduvene
thaaraga naamam solli neigizhndhiduvene
muththaaga udhirum sorkal korthanivene
muzhu mudhale unnaal piravi payan adaindhene
vaiththa maa nidhiye pudhu vaazhvu thandhaaye - unnai
varamaaga thandhaay shankara peru petrene
பைத்தியமானேன் உன்னாலே வைத்தியநாதா
பவவினை தீர்ந்தேன் உன்னாலே ஓ குருநாதா
நித்தியமாம் வாழ்வு என்று நினைந்திருந்தேனே
நீ அதைப் பொய்யென்றாய் எனை உணர்ந்தேனே
சத்தியத்தின் சாட்சி என்று உனைக் கண்டேனே
சங்கரன்தான் காப்பவன் என்று உறுதி பூண்டேனே
தத்துவத்தின் தாயகம் உன்னைப் போற்றிடுவேனே
தாரக நாமம் சொல்லி நெகிழ்ந்திடுவேனே
முத்தாக உதிரும் சொற்கள் கோர்த்தணிவேனே
முழுமுதலே உன்னால் பிறவி பயன் அடைந்தேனே
வைத்த மாநிதியே புது வாழ்வு தந்தாயே - உன்னை
வரமாக தந்தாய் சங்கரா பேறு பெற்றேனே
Comments