Pagaivanai ninaithe
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Pagaivanai ninaithe bayandhidum maname
bagavaanai oru murai ninaithaayaa
edhiriyai nithaithe padharidum maname
iraivanai oru kanam ninaithaayaa
nanbanai udhavikku azhaithidum naave
narayana enru azhaithaayaa
kovilai adaindhadhum kulam ketta vizhiye
govindhan thiruvadi paarththaayaa
kettadhum kettadhum kettidum seviye
geethaiyin perunmai kettaayaa
aimpulan aasaiyil alaindhidum jadame
aiyanil aikkiyam adaivaayaa
manam pona pokkile pesidum vaaye
maunaththin peraatral unarvaayaa
naasiyin vazhiye nasikkinra moochche
vaasikkul sugamaaga vasippaaya
varavukkum selavukkum idaippatta manidha
maadhavan Shankaranai thozhudhaayaa
uravukku uzhaithe oayndhidum manidha
oorukku uzhaithida varuvaayaa
பகைவனை நினைத்தே பயந்திடும் மனமே
பகவானை ஒரு முறை நினைத்தாயா
எதிரியை நினைத்தே பதறிடும் மனமே
இறைவனை ஒரு கணம் நினைத்தாயா
நண்பனை உதவிக்கு அழைத்திடும் நாவே
நாராயணா என்று அழைத்தாயா
கோவிலை அடைந்தும் குலம் கெட்ட விழியே
கோவிந்தன் திருவடி பார்த்தாயா
கெட்டதும் கேட்டதும் கேட்டிடும் செவியே
கீதையின் பேருண்மை கேட்டாயா
ஐம்புலன் ஆசையில் அலைந்திடும் ஜடமே
ஐயனில் ஐக்கியம் அடைவாயா
மனம் போன போக்கிலே பேசிடும் வாயே
மௌனத்தின் பேராற்றல் உணர்வாயா
நாசியின் வழியே நசிக்கின்ற மூச்சே
வாசிக்குள் சுகமாக வசிப்பாயா
வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட மனிதா
மாதவன் சங்கரனை தொழுதாயா
உறவுக்கு உழைத்தே ஓய்ந்திடும் மனிதா
ஊருக்கு உழைத்திட வருவாயா
Comments