Pagai Kadidhal...Thiruvalar
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thiruvalar sudaruruvae sivakara mamaruruvae
arumarai pugazhuruvae aravargal thozhumuruvae
irulthabu moliyuruvae enaninai enadhedhirae
gurugugan mudhan mayilae konardhiyun iraivanaiyae
marai pugazh irai munarae marai mudhal pagaruruvae
poraimali yulaguruvae punanadai tharumuruvae
iraiyila mugavuruvae enaninai enadhedhirae
kuraivaru thirumayilae konardhiyun iraivanaiyae
idharargal palar poravae ivanurai enadhedhirae
madhiravi palavenadhaer valarsara nidaiyenamaa
chathurodu varumayilae thadavarai asaivuravae
gudhitharu morumayile konardhiyun iraivanaiyae
bavanadai manudarmunae padaruru menadhedhirae
navamani nudhalaiyaer nagaipala midaranimaal
sivaniya thirumayilae dhidanodu noduvalamae
kuvalayam varumayilae konardhiyun iraivanaiyae
azhaguru malarmuganae amarargal paniguganae
maruvuru udaiyavanae madhithani periyavanae
izhavilar iraiyavanae enaninai yenadhedhirae
kuzhagadhu milirmayilae konrdhiyun iraivanaiyae
inaiyarum arumuganae yidhasasi marumaganae
inarani puralpuyanae enaninai yenadhedhirae
ganapana aravuramae kalaivura lezhutharumor
gunamuru manimayilae konardhiyun iraivanaiyae
eliya en iraigugaa enaninai yenadhedhirae
velinigazh thiralgalai meen milirsinai enamidaivaan
palapala venaminumaa palasirai viritharuneel
kulirmani vizhimayilae konardhiyun iraivanaiyae
igalaru sivakumara enaninai yenadhedhirae
sugamuni varalezhilaar surarpalar pugazhseyavae
thogu thogu thoguvenavae suranada midumayilae
gugapathi amarmayilae konardhiyun iraivanaiyae
karunaipei ganamugilae kadamuni panimudhalae
arunaiya naranenavae yaganirai yenadhedhirae
marumalarani palavae maruvidu kalamayilae
gurupala avir mayilae konardhiyun iraivanaiyae
பகை கடிதல் [பாம்பன் ஸ்வாமிகள்]
திருவளர் சுடருருவே சிவகர மமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே
இருள்தபு மொளியுருவே எனநினை யெனதெதிரே
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே
மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே
இறையிள முகவுருவே எனநினை யெனதெதிரே
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே
இதரர்கள் பலர்பொரவே யிவணுறை எனதெதிரே
மதிரவி பலவெனதேர் வளர்சர ணிடையெனமா
சதுரொடு வருமயிலே தடவரை அசைவுறவே
குதிதரு மொருமயிலே கொணர்தியுன் இறைவனையே
பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால்
சிவனிய திருமயிலே திடனொடு நொடிவலமே
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே
அழகுறு மலர்முகனே அமரர்கள் பணிகுகனே
மருவுரு உடையவனே மதிதனி பெரியவனே
இழவிலர் இறையவனே எனநினை யெனதெதிரே
குழகது மிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே
இணையறும் அறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை யெனதெதிரே
கணபண அரவுரமே கலைவுற லெழுதருமோர்
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே
எளிய என் இறையகுகா எனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை எனமிடைவான்
பளபள வெனமினுமா பலசிறை விரிதருநீள்
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே
இலகயின் மயின் முருகா எனநினை யெனதெதிரே
பலபல களமணியே பல பல பதமணியே
கல கல கலவெனமா கவினொடு வருமயிலே
குலவிடு சிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே
இகலறு சிவகுமரா எனநினை யெனதெதிரே
சுகமுனி வரலெழிலார் சுரர்பலர் புகழ்செயவே
தொகு தொகு தொகுவெனவே சுரநட மிடுமயிலே
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே
கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே
மருமலரணி பலவே மருவிடு களமயிலே
குருபல அவிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே
Comments