Paasi padarndha malai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Paasi padarndha malai
pangunithther oadum malai
oosi padarndha malai - muruga
uththiraatcham kaaykkum malai
endha malai uyarndha malai
andha malai pazhani malai
andha malayai kandu - muruga
yeruvaen un sannidhi mun
malaikkul malai naduvae
malaiyaala dhesamappaa
malaiyaala dhesam vittu - muruga
mayilaeri varuvaayippo
yeraadha malaithanilae
yaeri ninru thaththalikka
paaraamal kai koduppaay - muruga
pazhani malai vaelavanae
uchchiyilae sadaiyirukka
ullankaiyilae vaelirukka
paavi naan enru solli - muruga
paaraamal irukkinraayae
aaru padai veedu konda
aarumuga Shankaranae
yezhaam padai veedu konda
engal Sri Siva Shankaranae
solai malai kizhavanukku aaragarogara
sogusukkaara muruganukku aragarogara
kunrilaadum kumaranukku aragarogara
kuzhandhai vadivaelanukku aragarogara
kandhappa saamikku aragarogara
sondhappa saamikku aragarogara
oankaara thaththuvarkku aragarogara
sivashakthi maindhanukku aragarogara
valli manavaalarukku aragarogara
pulli mayil vaelanukku aragarogara
Sivashankara dheivathirku aragarogara
siththayoga purusharukku aragarogara
aragarogara swami aragarogara
aragarogara swami aragarogara
aarumuga Shankaranukku aragarogara
yezhaampadai kondavarkku aragarogara
பாசி படர்ந்த மலை
பங்குனித்தேர் ஓடும் மலை
ஊசி படர்ந்த மலை முருகா
உத்திராட்சம் காய்க்கும் மலை
எந்த மலை உயர்ந்த மலை
அந்த மலை பழனி மலை
அந்த மலையைக் கண்டு முருகா
ஏறுவேன் உன் சந்நிதி முன்
மலைக்குள் மலை நடுவே
மலையாள தேசமப்பா
மலையாள தேசம் விட்டு முருகா
மயிலேறி வருவாயிப்போ
ஏறாத மலைதனிலே
ஏறி நின்று தத்தளிக்க
பாராமல் கை கொடுப்பாய் முருகா
பழனி மலை வேலவனே
உச்சியிலே சடையிருக்க
உள்ளங்கையிலே வேலிருக்க
பாவி நான் என்று சொல்லி முருகா
பாராமல் இருக்கின்றாயே
ஆறுபடை வீடு கொண்ட
ஆறுமுக சங்கரனே
ஏழாம்படை வீடு கொண்ட
எங்கள் ஸ்ரீ சிவ சங்கரனே
சோலை மலை கிழவனுக்கு அரகரோகரா
சொகுசுக்கார முருகனுக்கு அரகரோகரா
குன்றிலாடும் குமரனுக்கு அரகரோகரா
குழந்தை வடிவேலனுக்கு அரகரோகரா
கந்தப்ப சாமிக்கு அரகரோகரா
சொந்தப்ப சாமிக்கு அரகரோகரா
ஓங்கார தத்துவர்க்கு அரகரோகரா
சிவசக்தி மைந்தனுக்கு அரகரோகரா
வள்ளி மணவாளருக்கு அரகரோகரா
புள்ளி மயில் வேலனுக்கு அரகரோகரா
சிவசங்கர தெய்வத்திற்கு அரகரோகரா
சித்தயோக புருஷருக்கு அரகரோகரா
அரகரோகரா ஸ்வாமி அரகரோகரா
அரகரோகரா ஸ்வாமி அரகரோகரா
ஆறுமுக சங்கரனுக்கு அரகரோகரா
ஏழாம்படை கொண்டவர்க்கு அரகரோகரா
Comments