Paarkadalum Thaan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
பாற்கடலும்தான் புளித்ததோ - உன்
பாம்பு மெத்தைதான் உறுத்துதோ
தூங்கித் தூங்கி மனம் வெறுத்ததோ
தூது நடந்து கால் வலித்ததோ
கோபியர்மேல் எண்ணம் வளர்ந்ததோ
குழலூதும் ஆசை வந்ததோ
வேங்கடத்தில் நின்றலுத்ததோ
வெற்றிச் சங்கம் காதில் கேட்டதோ
மதுரா நகர் நினைவு வந்ததோ - அன்னை
மடியுறங்க எண்ணம் வந்ததோ
விதுரன் வீட்டு உணவிழுத்ததோ - கோகுலத்தில்
விளையாட காலும் துடித்ததோ
உலகை உண்டு வாய் வலித்ததோ - அதை
உமிழ்ந்த பின் களைப்பு வந்ததோ
நிலம் அளந்து தானம் கேட்டதோ - உன்
நினைவெங்கு பதிந்து விட்டதோ
Comments