Paarka Paarka
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
பார்க்கப் பார்க்கத் திகட்டாத அழகு
பழகப் பழக இறுகுகின்ற உறவு
பசிப்போர்க்கு ருசிக்கின்ற தமிழே - நீ
கொடுக்க கொடுக்க வளர்கின்ற அருளே
சொல்லச் சொல்ல சுவை கூடும் நாமம்
சுவைக்கச் சுவைக்க இனிக்கின்ற அன்பே
நினைக்க நினைக்க நெகிழும் எம் உள்ளம் - உன்னில்
நிலைக்க நிலைக்க உயரும் எம் வாழ்வு
சிரிக்கச் சிரிக்க அறிவுறுத்தும் பண்பு - அதில்
சிலிர்த்துச் சிலிர்த்து மலர்ந்ததம்மா தென்பு
கேட்கக் கேட்க கேட்க வைக்கும் கானம் - நீ
கிடைக்கக் கிடைக்க விலகும் அஞ்ஞானம்
கிட்டக் கிட்ட வந்து பேசும் தெய்வம் - நீ
தொட்டு விட்ட உயரம் இறைவன் இதயம்
பட்டு விட்ட மரமும் பூப்பூக்கும் - உன்
பார்வை பட்டால் கடலலையும் அடங்கும்
மிடுக்கும் எடுப்பும் நிறைந்த அழகுத் தோற்றம் - நீ
மீண்டும் மீண்டும் தழைக்கின்ற ஆற்றல்
எடுக்க எடுக்கக் குறையாத அமுதம் - நீ
எழுத எழுத முடியாத சரிதம்
Comments