Orukaal ninadhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Orukaal ninadhu dharisanam aruli
udanaay ennai serppaaye
palakaal ninaindhu urugidum nenjil
baagavaan nee padham vaippaaye
manadhaal vaakkaal seyalaal ennul
mannaa nee thadam amaippaaye
udalaal eduththa payanaay thondugal
unakke seidhida tharuvaaye
viralaal sutti arugil azhaiththu
vinaigal yaavum theerththaay - mani
kuralaal oru tharam en peyar solli
kuraivilaa inbam serththaaye
arulaal undhan adiyil kidakka - indha
adimaikkum idam thandhaaye
anbaal ennai anaiththa Shankara
amma needhaan en thaaye
ஒரு கால் நினது தரிசனம் அருளி
உடனாய் என்னை சேர்ப்பாயே
பலகால் நினைந்து உருகிடும் நெஞ்சில்
பகவான் நீ பதம் வைப்பாயே
மனதால் வாக்கால் செயலால் என்னுள்
மன்னா நீ தடம் அமைப்பாயே
உடலால் எடுத்த பயனாய் தொண்டுகள்
உனக்கே செய்திட தருவாயே
விரலால் சுட்டி அருகில் அழைத்து
வினைகள் யாவும் தீர்த்தாயே - மணி
குரலால் ஒரு தரம் என் பெயர் சொல்லி
குறைவிலா இன்பம் சேர்த்தாயே
அருளால் உந்தன் அடியில் கிடக்க - இந்த
அடிமைக்கும் இடம் தந்தாயே
அன்பால் என்னை அணைத்த சங்கரா
அம்மா நீதான் என் தாயே
Comments