Oaradi vaiththu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oaradi vaiththu nadandhaal - ivan
nooradi edhire varuvaan
paaradi murugan vadivai
parugadi avanadhu azhagai
kaanadi avan oorkolam
kann kollaa thirukolam
kooradi avanadhu magimai
kuliradi guganin anbil
pazhani amarndha siva baalan
bakthargalukku anukoolan
pazhuththu mudhirndha thava seelan - kai
patri anaikkum vadivelan
sugandham manandhirukkum meni - naan
sutri suzhanru varum theni - ivan
piravi kadal kadakkum thoni - idhai
purindhu kondavan gnaani
Sivashankar avanadhu peru - ezhil
siriththu mayakkum thanga theru
endha oorum avan ooru - indha
iraivan thiruvadiyil seru
ஓரடி வைத்து நடந்தால் - இவன்
நூறடி எதிரே வருவான்
பாரடி முருகன் வடிவை
பருகடி அவனது அழகை
காணடி அவன் ஊர்கோலம்
கண்கொள்ளாத் திருக்கோலம்
கூறடி அவனது மகிமை
குளிரடி குகனின் அன்பில்
பழனியமர்ந்த சிவ பாலன்
பக்தர்களுக்கு அனுகூலன்
பழுத்து முதிர்ந்த தவ சீலன் - கை
பற்றி அணைக்கும் வடிவேலன்
சுகந்தம் மணந்திருக்கும் மேனி - நான்
சுற்றி சுழன்று வரும் தேனி - இவன்
பிறவிக் கடல் கடக்கும் தோணி - இதை
புரிந்து கொண்டவன் ஞானி
சிவசங்கர் அவனது பேரு - எழில்
சிரித்து மயக்கும் தங்கத்தேரு
எந்த ஊரும் அவன் ஊரு - இந்த
இறைவன் திருவடியில் சேரு
Comments