Ore Oru Kaname
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
ஒரே ஒரு கணமே போதும்
மறவாது நெஞ்சம் எப்போதும்
உனைப் பார்த்த கண் பதம் நிலைக்கும்
ஒரு வார்த்தை வெளிவரத் திகைக்கும்
வரும் கனவுகளிலெல்லாம்
வள்ளல் நின் முகமே தோன்றும் - நீ
தரும் வரபலத்தில் எங்கள்
தலை எழுத்துக்களும் மாறும்
தேக உறவுகள் எல்லாம் - பனி
மேகமோ என்று மறையும் - உன்
த்யாக உணர்வுகள் கண்டு - மன
மோகம் பொல்லென்று உதிரும்
மங்கலம் வாழ்வில் நிலைக்கும்
மகிழ்ச்சியில் உள்ளம் திளைக்கும்
சங்கரம் இதமாய் அணைக்கும் - புது
சரித்திரம் உலகில் படைக்கும்
Comentarios