Oonudabu aalayamaay
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oonudabu aalayamaay
ullam oru sannidhiyaay
maanida piravi thandha
maayavanai paaduginren
theniniya solleduththu
dheiva thamizhil kuzhaiththu
vaanuyarndha avan pugazhai
vaarthaigalil korththu vaiththen
gaanamonru isaitha avan
kai kuzhalin naadhaththile
monaththil aazhthi vittaan
mukthi perum vazhi uraithaan
dheenanaay ninra ennai
dhevanaay uyarthudharku
gnaaname vadiveduththa
naadhan varam thandhu vittaan
ennai oru karuvi ena
iyakkum shakthi avan
idhayaththin ullirundhu
ennangalai pozhigubavan
punnai maram melirindhu
kuzhaloodhi mayakkiyavan
buvanaththai oru kudai keezh
aalum Sivashankar avan
ஊனுடம்பு ஆலயமாய் உள்ளம் ஒரு சந்நிதியாய்
மானிடப் பிறவி தந்த மாயவனைப் பாடுகின்றேன்
தேனினிய சொல்லெடுத்து தெய்வத் தமிழில் குழைத்து
வானுயர்ந்த அவன் புகழை வார்த்தைகளில் கோர்த்து வைத்தேன்
கானமொன்று இசைத்த அவன் கைக்குழலின் நாதத்திலே
மோனத்தில் ஆழ்த்தி விட்டான் முக்தி பெறும் வழியுரைத்தான்
தீனனாய் நின்ற என்னைத் தேவனாய் உயர்த்துதற்கு
ஞானமே வடிவெடுத்த நாதன் வரம் தந்து விட்டான்
என்னை ஒரு கருவியென இயக்கும் சக்தியவன்
இதயத்தின் உள்ளிருந்து எண்ணங்களைப் பொழிகுபவன்
புன்னைமரம் மேலிருந்து குழலூதி மயக்கியவன்
புவனத்தை ஒரு குடைக்கீழ் ஆளும் சிவசங்கரவன்
Comentarios