Olimayam nee
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Olimayam nee sivamayam nee - un
ullam yeno thuyar mayam
vazhi un vasame vaazhvun vasame
vaazhndhu paarththidu vandhidum sugame
kanngal thirandhu kaatchi theriya
kaanum velicham kadhiravan
kanngal moodi unakkul nokka
kaanalaam gnaana sooriyan
maayai ennum moodi pottu
maraiththu vaiththa paaththiram [udal]
maayai thirandhaal mayakkam thelindhaal
manadhil param porul maaththiram
ஒளிமயம் நீ சிவமயம் நீ - உன்
உள்ளம் ஏனோ துயர் மயம்
வழி உன் வசமே வாழ்வுன் வசமே
வாழ்ந்து பார்த்திடு வந்திடும் சுகமே
கண்கள் திறந்து காட்சி தெரிய
காணும் வெளிச்சம் கதிரவன்
கண்கள் மூடி உனக்குள் நோக்க
காணலாம் ஞான சூரியன்
மாயை என்னும் மூடி போட்டு
மறைத்து வைத்த பாத்திரம் [உடல்]
மாயை திறந்தால் மயக்கம் தெளிந்தால்
மனதில் பரம் பொருள் மாத்திரம்
Comments