Oli vellam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Oli vellam paravudhu paravudhu
irul oadi maraiyudhu maraiyudhu
arul pongi perugudhu perugudhu
anbar manam urugudhu urugudhu
vinai ellaam vilagudhu vilagudhu
vizhi vellam udhirudhu udhirudhu
manai ellaam vilangudhu vilangudhu
magimai ellaam puriyudhu puriyudhu
thanai nenjam ariyudhu ariyudhu
thalai ellaam odiyudhu odiyudhu
thunai onru varugudhu varugudhu
thuyar ellaam karugudhu karugudhu
mukkaalamum ariyudhu ariyudhu
mummalamum arugudhu arugudhu
ikkaalam iniyadhu iniyadhu
iraiyudane vaazhvadhu vaazhvadhu
ulagellaam vanangudhu vanangudhu
ullangal vaazhthudhu vaazhthudhu
kalagangal maraiyudhu maraiyudhu
kanavellaam palikkudhu palikkudhu
dheivamidhu ariyadhu ariyadhu
thiruvarulo periyadhu peiyadhu
Sivashankaram eliyadhu eliyadhu
sindhanaiagal adhuve thandhadhu
ஒளி வெள்ளம் பரவுது பரவுது
இருளோடி மறையுது மறையுது
அருள் பொங்கிப் பெருகுது பெருகுது
அன்பர் மனம் உருகுது உருகுது
வினயெல்லாம் விலகுது விலகுது
விழிவெள்ளம் உதிருது உதிருது
மனையெல்லாம் விளங்குது விளங்குது
மகிமையெல்லாம் புரியுது புரியுது
தனை நெஞ்சம் அறியுது அறியுது
தளையெல்லாம் ஒடியுது ஒடியுது
துணையொன்று வருகுது வருகுது
துயரெல்லாம் கருகுது கருகுது
முக்காலமும் அறியுது அறியுது
மும்மலமும் அறுகுது அறுகுது
இக்காலம் இனியது இனியது
இறையுடனே வாழ்வது வாழ்வது
உலகெல்லாம் வணங்குது வணங்குது
உள்ளங்கள் வாழ்த்துது வாழ்த்துது
கலகங்கள் மறையுது மறையுது
கனவெல்லாம் பலிக்குது பலிக்குது
தெய்வமிது அரியது அரியது
திருவருளோ பெரியது பெரியது
சிவசங்கரம் எளியது எளியது
சிந்தனைகள் அதுவே தந்தது
Comments