Muthaayiram korththa
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Muthaayiram korththa oru maalaiyaam
muruval malar pooththa pooncholaiyaam
paththaayiram ponnaal abishegamaam
bakthar manamellaam santhoshamaam
theruvengum maavilai thoranamaam
theliththa panneer mele kolangalaam
nadhi yellaam sangamam aanadhu pol
naatrisaiyum jana samuthiramaam
mangala vaathiya muzhakkangalaam - oli
mangaa vilakku varisaigalaam
thanga thagattil poriththirukkum - engal
thava magan uraiththa vaarthaigalaam
vedha paaraayana goshangalaam - kalai
viththagarkkellaam parisugalaam
bodhagar saadhagar yaavarkkume
pon mudippaam pattaadaigalaam
chandhana kunguma vaasanaiyaam
saaththira mandhira poosanaiyaam
pandhi pandhiyaaga bojanamaam
paarththavarkkellaam romaanjanamaam
sanmaarkkam enroru aasanamaam - adhil
Shankara dheiva dharisanamaam
kann paarththaale jenma saabalyamaam - avar
kaaladi manne nirmaalyamaam
முத்தாயிரம் கோர்த்த ஒரு மாலையாம்
முறுவல் மலர் பூத்த பூஞ்சோலையாம்
பத்தாயிரம் பொன்னால் அபிஷேகமாம்
பக்தர் மனமெல்லாம் சந்தோஷமாம்
தெருவெங்கும் மாவிலைத் தோரணமாம்
தெளித்த பன்னீர் மேலே கோலங்களாம்
நதியெல்லாம் சங்கமமானது போல்
நாற்றிசையும் ஜன சமுத்திரமாம்
மங்கல வாத்ய முழக்கங்களாம் - ஒளி
மங்கா விளக்கு வரிசைகளாம்
தங்கத் தகட்டில் பொறித்திருக்கும் - எங்கள்
தவமகன் உரைத்த வார்த்தைகளாம்
வேத பாராயண கோஷங்களாம் - கலை
வித்தகர்க்கெல்லாம் பரிசுகளாம்
போதகர் சாதகர் யாவருக்குமே
பொன் முடிப்பாம் பட்டாடைகளாம்
சந்தன குங்கும வாசனையாம்
சாத்திர மந்திர பூசனையாம்
பந்தி பந்தியாக போசனமாம்
பார்த்தவர்க்கெல்லாம் ரோமாஞ்சனமாம்
சன்மார்க்கம் என்றொரு ஆசனமாம் - அதில்
சங்கர தெய்வ தரிசனமாம்
கணபார்த்தாலே ஜென்ம சாபல்யமாம் - அவர்
காலடி மண்ணே நிர்மால்யமாம்
Comments