Moongil thulaiyil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Moongil thulaiyil kaatru pugundhu munagum sangeetham
moochu kuzhalil Shankara dheivam meettum oru geetham
yengi kidandha nenjil thembai ezhuppiya sangeetham - idhu
ettu thisaiyil mettu pottu paadum sangeetham
Shankara Shankara Siva Siva Shankara Shankara sangeetham
anbu ennum sorgaththulle azhaikkum sangeetham
aanandhamaay amudham thannai oottum sangeetham
anbai vidhaiththu payanai ulagirkalikkum sangeetham - idhu
patru atra ullam konda paasa sangeetham
aanmaavellaam thatti ezhuppum arpudha sangeetham
aadhaaram pallaayiram kaattum adhisaya sangeetham
vanmam konda nenjam thannai valaikkum sangeetham - naam
vaazhum vagaiyai kaatti nammai vaazhthum sangeetham
otrumai thannai ulagirkellaam unarththum sangeetham
oadum manadhai izhuththu adhanul undhum sangeetham
kanindha nenjam kavidhaiyaaga oorum sangeetham
kaaviyangalile naayagamaaga thigazhum sangeetham
vanga kadalalai kulavai ittu vanangum sangeetham
vaanil udhikkum kadhirukkul mugam kaattum sangeetham
thanga karaththaal varangal alli thandhidum sangeetham
shankaramaam arul saagarame en uyirin sangeetham
மூங்கில் துளையில் காற்று புகுந்து முனகும் சங்கீதம்
மூச்சுக் குழலில் சங்கர தெய்வம் மீட்டும் ஒரு கீதம்
ஏங்கிக் கிடந்த நெஞ்சில் தெம்பை எழுப்பிய சங்கீதம் - இது
எட்டுத் திசையில் மெட்டுப் போட்டு பாடும் சங்கீதம்
சங்கர சங்கர சிவ சிவ சங்கர சங்கர சங்கீதம்
அன்பு என்னும் சொர்க்கத்துள்ளே அழைக்கும் சங்கீதம்
ஆனந்தமாய் அமுதம் தன்னை ஊட்டும் சங்கீதம்
அன்பை விதைத்து பயனை உலகிற்களிக்கும் சங்கீதம் - இது
பற்று அற்ற உள்ளம் கொண்ட பாச சங்கீதம்
ஆன்மாவெல்லாம் தட்டி எழுப்பும் அற்புத சங்கீதம்
ஆதாரம் பல்லாயிரம் காட்டும் அதிசய சங்கீதம்
வன்மம் கொண்ட நெஞ்சம் தன்னை வளைக்கும் சங்கீதம் - நாம்
வாழும் வகையை காட்டி நம்மை வாழ்த்தும் சங்கீதம்
ஒற்றுமை தன்னை உலகிற்கெல்லாம் உணர்த்தும் சங்கீதம்
ஓடும் மனதை இழுத்து அதனுள் உந்தும் சங்கீதம்
கனிந்த நெஞ்சம் கவிதையாக ஊறும் சங்கீதம்
காவியங்களிலே நாயகமாக திகழும் சங்கீதம்
வங்கக் கடலலை குலவை இட்டு வணங்கும் சங்கீதம்
வானில் உதிக்கும் கதிருக்குள் முகம் காட்டும் சங்கீதம்
தங்கக் கரத்தால் வரங்கள் அள்ளி தந்திடும் சங்கீதம்
சங்கரமாம் அருள் சாகரமே என் உயிரின் சங்கீதம்
Comments