top of page

Mittai vaangalaiyo

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Mittai vaangalaiyo - Shankara

mittai vaangalaiyo


bakthiyenum iniya suvaiyai paasam thottu oottum mittaay

pakkuvamaay thavatheeyil paagu kaaychi seidha mittaay

shakthiyai pangu pottu samamaaga alikkum mittaay

mukthi vaasanai kaatti moovulagum eerkkum mittaay


makkal koottam moikka thannai manamuvandhu thandha mittaay

pakkaththu dhesangalai paarvaiyile kavarndha mittaay

eduththu rusippavarkku yezh piravi inikkum mittaay

idhayathil ooduruvi ennangalai maatrum mittaay


kaadu malaigal sutri kadum thavam yetra mittaay

kadavulin iyalbugalai kai vara petra mittaay

vedu manaivi makkal viruppudane thurandha mittaay

vilaiyaiyum thaane thandhu virpanaikku vandha mittaay


kaanji mahaan adaiyaalam kandu sonna jothi mittaay

yogiram surath kumarin yaaga theeyil yezhundha mittaay

koduththu suvaikka solli kodi magaan thandha mittaay

koovi koovi namai azhaiththu kolvaarundo ennum mittaay


மிட்டாய் வாங்கலையோ - சங்கர

மிட்டாய் வாங்கலையோ


பக்தியெனும் இனிய சுவையைப் பாசம் தொட்டு ஊட்டும் மிட்டாய்

பக்குவமாய் தவத்தீயில் பாகு காய்ச்சி செய்த மிட்டாய்

சக்தியைப் பங்கு போட்டு சமமாக அளிக்கும் மிட்டாய்

முக்தி வாசனை காட்டி மூவுலகும் ஈர்க்கும் மிட்டாய்


மக்கள் கூட்டம் மொய்க்கத் தன்னை மனமுவந்து தந்த மிட்டாய்

பக்கத்து தேசங்களைப் பார்வையிலே கவர்ந்த மிட்டாய்

எடுத்து ருசிப்பவர்க்கு ஏழ் பிறவி இனிக்கும் மிட்டாய்

இதயத்தில் ஊடுருவி எண்ணங்களை மாற்றும் மிட்டாய்


காடு மலைகள் சுற்றிக் கடுந்தவம் ஏற்ற மிட்டாய்

கடவுளின் இயல்புகளைப் கைவரப் பெற்ற மிட்டாய்

வீடு மனைவி மக்கள் விருப்புடனே துறந்த மிட்டாய்

விலையையும் தானே தந்து விற்பனைக்கு வந்த மிட்டாய்


காஞ்சி மகான் அடையாளம் கண்டு சொன்ன ஜோதி மிட்டாய்

யோகிராம் சூரத் குமாரின் யாகத்தீயில் எழுந்த மிட்டாய்

கொடுத்து சுவைக்கச் சொல்லி கோடி மகான் தந்த மிட்டாய்

கூவி கூவி நமை அழைத்துக் கொள்வாருண்டோ என்னும் மிட்டாய்

 
 
 

Recent Posts

See All
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Malai sootti

Malai sootti magizhvome - Sivashankarukku paamaalai sootti magizhvome manamennum thaamaraiyil bakthi malaarai kondu anbenum naareduthu...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page