Mella Nadandhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
மெல்ல நடந்து வாடா - உன்
செல்லத் திருப்பதங்கள் நொந்து புண்ணாகுமடா
உள்ளம் எனும் காட்டில் முள்ளுச் செடிகளடா
ஓடி வந்து அமர கால் சிந்தும் குருதியடா
கள்ளம் செய்யும் கற்கள் அள்ள அள்ளக் குறையாது
கர்வமும் ஆசைகளும் எண்ணித் தொலையாது
பள்ளம் மேடு பாகுபாடு சொல்லத் தொலையாது
பாண்டுரங்கா- ஹே பாண்டுரங்கா சங்கரா
கவனம் கவனமடா
மூந்தி முந்தி என்றோடி சேவை பல செய்பவனே
மூடர் உலகம் உந்தன் நேசம் அறியாதடா
அஞ்சி அரற்றுகிறோம் அவலங்கள் போக்கிடடா
கெஞ்சிக் கதறுகிறோம் கொஞ்சம் இரங்கிடடா
அத்தன் அம்மையென அன்பை அள்ளிச் சொரிபவனே
அண்டி வந்த எங்களுக்கும் ஆறுதல் வேறெவரடா
பித்தம் பிடித்து நாங்கள் பிதற்றித் திரிவதற்குள்
சித்தா- ஓ சித்தா சிவசங்கரா சீக்கிரமே ஆட்கொள்ளடா
コメント