Mecca madina
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Mecca madina sutri varum maasillaadha venmadhiye
ekkaalam naan adhai kaanben ennai azhaiththu selvaya
mukkaalamum unarndhavanaam mahammadhennum irai thoodhan
dharkkaavil naan thozhudhidave thagudhi udaiyen aavena
nenjil vanjam udaiyen yaan nermai vazhiyai ariyen yaan
minjum asaiyil uzhalum ennai meettu azhaithu kolvaana
anji aratrum abalai ennai allaa yetru kolvaanaa
kenji kadharum en kuralai komaan kettu magizhvaanaa
kallaal adiththu viratti vittom kadum sol pesi noga vittom
kaalgalil naam veezhndhu vittom karunai magaan kaappaanaa
pullaay vandha piraviyile poovaay malarndhu sirippenaa
punidhan andha allaahoo piravi thalaiyai aruppaanaa
மெக்கா மதினா சுற்றி வரும் மாசில்லாத வெண்மதியே
எக்காலம் நான் அதைக் காண்பேன் என்னை அழைத்து செல்வாயா
முக்காலமும் உணர்ந்தவனாம் முஹம்மதென்னும் இறை தூதன்
தர்க்காவில் நான் தொழுதிடவே தகுதி உடையேன் ஆவேனா
நெஞ்சில் வஞ்சம் உடையேன் யான் நேர்மை வழியை அறியேன் யான்
மிஞ்சும் ஆசையில் உழலும் என்னை மீட்டு அழைத்துக் கொள்வானா
அஞ்சி அரற்றும் அபலை என்னை அல்லா ஏற்றுக் கொள்வானா
கெஞ்சி கதறும் என் குரலை கோமான் கேட்டு மகிழ்வானா
கல்லால் அடித்து விரட்டி விட்டோம் கடும் சொல் பேசி நோக விட்டோம்
கால்களில் நாம் வீழ்ந்து விட்டோம் கருணை மகான் காப்பானா
புல்லாய் வந்த பிறவியிலே பூவாய் மலர்ந்து சிரிப்பேனா
புனிதன் அந்த அல்லாஹூ பிறவித்தளையை அறுப்பானா
Comments