top of page

Mayileri Ulagai

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

மயிலேறி உலகை வலம் வந்த குழந்தை - இவன்

மாம்பழத்தை கோட்டை விட்ட பச்சைக்குழந்தை

கயல் விழியால் கவர்ந்திழுக்கும் சின்ன குழந்தை

கருணையினால் இறங்கி வந்த தெய்வக்குழந்தை


வேலெடுத்து விளையாடும் பொல்லாக்குழந்தை - எனக்கும்

நாலெழுத்து கற்று தந்த நல்ல குழந்தை

சூரர்களை வென்று விட்ட வீரக்குழந்தை

சிவசங்கர் என் தாயின் பேரக்குழந்தை


சரவணத்தில் தாமரையில் மலர்ந்த குழந்தை

சண்முகனாய் தாயணைப்பில் தவழ்ந்த குழந்தை

தகப்பனுக்கு சாமியான குறும்பு குழந்தை

தத்தி தத்தி நடந்து வரும் நறம்பு குழந்தை


காவடியை தூக்கி வரும் கந்த குழந்தை

காலடி என் நெஞ்சில் வைத்த பிஞ்சு குழந்தை

படைப்போனை சிறையிலிட்ட சுட்டிக்குழந்தை - என்

இடுப்பை விட்டு இறங்க மறுக்கும் குட்டி குழந்தை


 
 
 

Recent Posts

See All
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Malai sootti

Malai sootti magizhvome - Sivashankarukku paamaalai sootti magizhvome manamennum thaamaraiyil bakthi malaarai kondu anbenum naareduthu...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page