Mannadiyil vilangudhoru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Mannadiyil vilangudhoru autpathi - adhil
malaiyappan therudhaane thiruppadhi
saannithyam kondadhindha sannidhi - Siva
Shankarane venkatachalapathy
andi vandha pergalukku avan gadhi - avan
aasi pera oadidume kodum vidhi
kannanivan pin nadakka sammadhi - nee
kandiduvaay vaazhvil perum nimmadhi nimmadhi
vaanil inru mulaithezhundha muzhumadhi - ivan
gnaaniyargal thedikkanda navanidhi
thenin suvai pechudaiya arulnidhi - ivan
dhesamellaam aala vandha boopathi boopathi
மண்ணடியில் விளங்குதொரு அருட்பதி - அதில்
மலையப்பன் தெருதானே திருப்பதி
சாந்நித்யம் கொண்டதிந்த சந்நிதி - சிவ
சங்கரனே வேங்கடாசலபதி
அண்டி வந்த பேர்களுக்கு அவன் கதி - அவன்
ஆசி பெற ஓடிடுமே கொடும் விதி
கண்ணனிவன் பின் நடக்க சம்மதி - நீ
கண்டிடுவாய் வாழ்வில் பெரும் நிம்மதி நிம்மதி
வானில் இன்று முளைத்தெழுந்த முழுமதி - இவன்
ஞானியர்கள் தேடிக்கண்ட நவநிதி
தேனின் சுவைப் பேச்சுடைய அருள்நிதி - இவன்
தேசமெல்லாம் ஆள வந்த பூபதி பூபதி
ความคิดเห็น