Mannadiyil oru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Mannadiyil oru koyilamma
malaiyappan theruvile vaayilamma
kannane vazhipadum dheivamamma - avan
kaaladiye engal sorgamamma
vanna mugaththile pooththirukkum
vaanjaikkuvamai ariyenamma
ennamellaam kollai kondu vidum - andha
iraivanin leelai ariyadhamma
sama dharmame angu thoongalamma
sanmaarkkame adhan kooraiyamma
abayakaram kodi chinnamamma - arul
samratchanam adhan kolgaiyamma
anbe avan tharum pokkishamaam - adhu
allak kuraiyaadha aishvaryamaam
thenbu tharum avan dharisanamaam - andha
dheivam nam mel vaiththa karisanamaam
Sivashankar enbadhavan naamamammaa
sindhiththaal kai koodum kshemamammaa
navakolum avan aanaikkadangumammaa - andha
naayagan paarvai vinai theerkkumammaa
மண்ணடியில் ஒரு கோயிலம்மா
மலையப்பன் தெருவிலே வாயிலம்மா
கண்ணனே வழிபடும் தெய்வமம்மா - அவன்
காலடியே எங்கள் சொர்க்கமம்மா
வண்ண முகத்திலே பூத்திருக்கும்
வாஞ்சைக்குவமை அறியேனம்மா
எண்ணமெல்லாம் கொள்ளை கொண்டு விடும் - அந்த
இறைவனின் லீலை அரியதம்மா
சமதர்மமே அங்கு தூண்களம்மா
சன்மார்க்கமே அதன் கூறையம்மா
அபயகரம் கொடி சின்னமம்மா - அருள்
சம்ரட்சணம் அதன் கொள்கையம்மா
அன்பே அவன் தரும் பொக்கிஷமாம் - அது
அள்ளக் குறையாத ஐஸ்வர்யமாம்
தென்பு தரும் அவன் தரிசனமாம் - அந்த
தெய்வம் நம் மேல் வைத்த கரிசனமாம்
சிவசங்கர் என்பதவன் நாமமம்மா
சிந்தித்தால் கை கூடும் க்ஷேமமம்மா
நவகோளும் அவன் ஆணைக்கடங்குமம்மா - அந்த
நாயகன் பார்வை வினை தீர்க்குமம்மா
Comentários