top of page

Mannadi thalaththinile

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Mannadi thalaththinile vandhu paarunga - unga

manakkurai yaavum inge theerndhu pogunga

aiyan Sivashankaranai utru paarunga - unga

achamellaam oadi vidum saththiyam thaanga


panja bootham ivan edhiril nadu nadungunga - kodiya

panjam kooda paarvai pattaal parandhu oadunga

kanja malar paadhangalil veezhndhu vidunga - ivan

karunai kaatta venuminnu vendikkidunga


aarupadai veedu konda shanmuganunga - namakku

aarudhalai thandhidave vandhavanunga

thaaraganaam sooranai vadhaithavanunga - than

thaayin shakthi velai petru nirkiraanunga


kandhanai kaanaadha kannu enna kannunga - pugazh

sandhangal paadaadha naavum irundhum ennanga - en

sondham enriruppadhivan oruvan thaanunga - enna

sokku podi pottaano naan ariyenunga


kannai moodi kondaal en nenjil sirikkiraan

kann thirandhu paarththaalo edhiril nirkiraan

katti kondu muththamida kitta chenraalo

kaal silambu kala kalakka oadi maraiyuraan


maambazhathirkaay ulagai sutri vandhavan - than

malaradi panindhavarkku arul tharugiraan - indha

then kasiyum pazha chuvaiyai neengal rusikka

thedi inge vandhiduveer maanidargale



மண்ணடி தலத்தினிலே வந்து பாருங்க - உங்க

மனக்குறை யாவும் இங்கே தீர்ந்து போகுங்க

ஐயன் சிவசங்கரனை உற்றுப் பாருங்க - உங்க

அச்சமெல்லாம் ஓடி விடும் சத்தியம் தாங்க


பஞ்சபூதம் இவனெதிரில் நடு நடுங்குங்க - கொடிய

பஞ்சம் கூடப் பார்வை பட்டால் பறந்து ஓடுங்க

கஞ்ச மலர்ப் பாதங்களில் வீழ்ந்து விடுங்க - இவன்

கருணை காட்ட வேணுமின்னு வேண்டிக்கிடுங்க


ஆறுபடை வீடு கொண்ட ஷண்முகனுங்க - நமக்கு

ஆறுதலைத் தந்திடவே வந்தவனுங்க

தாரகனாம் சூரனை வதைத்தவனுங்க - தன்

தாயின் சக்தி வேலைப் பெற்று நிற்கிறானுங்க


கந்தனைக் காணாத கண்ணு என்ன கண்ணுங்க - புகழ்

சந்தங்கள் பாடாத நாவும் இருந்தும் என்னங்க - என்

சொந்தம் என்றிருப்பதிவன் ஒருவன் தானுங்க - என்ன

சொக்குப்பொடி போட்டானோ நான் அறியேனுங்க


கண்ணை மூடிக் கொண்டால் என் நெஞ்சில் சிரிக்கிறான்

கண் திறந்து பார்த்தாலோ எதிரில் நிற்கிறான்

கட்டிக் கொண்டு முத்தமிடக் கிட்டச் சென்றாலோ

கால் சிலம்பு கல கலக்க ஓடி மறையுறான்


மாம்பழத்திற்காய் உலகை சுற்றி வந்தவன் - தன்

மலரடி பணிந்தவர்க்கு அருள் தருகிறான் - இந்த

தேன் கசியும் பழச் சுவையை நீங்கள் ருசிக்க

தேடி இங்கே வந்திடுவீர் மானிடர்களே

 
 
 

Recent Posts

See All
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Malai sootti

Malai sootti magizhvome - Sivashankarukku paamaalai sootti magizhvome manamennum thaamaraiyil bakthi malaarai kondu anbenum naareduthu...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page