top of page

Manidhan seydhadhai

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Manidhan seydhadhai marandhU vittaal - adhu

sei nanri konradhaagum - Siva

Shankaran seidhadhai marandhu vittaal - adhu

edhanai konradhaagum

marandhadhaiye nee ninaikkaamal - avarai

ninaikka marandhu vidalaam - nee

marandhadhaiye avar marakkaamal - unnai

marakka ninaithu viduvaar


kadhari kadhari azhudhaaye nee

adhanai marakkaadhe

karunai kondu anaiththaare nee

adhanai marakkaadhe

karma vinaiyin kadanaay thavithaay

adhanai marakkaadhe

dharma seelan tharunathil kaaththaar

adhanaiyum marakkaadhe

uyirpogum nilaiyil kooda un

arugirundhu uyir meettaare - un

madhi thotra vidhiyai maatri oru

punarjenmam aliththu kaaththaare

anbai thavira veronrariyaa

avarai marakkaadhe

avarai thavira abayam illai

adhanaiyum marakkaadhe


nanru nanru nanrenra vazhiyil

naaygan marakkaadhe

nanranri theengonrum theendaadhu

kaappaar marakkaadhe

than nenju poykkaamal avar seidha

nanmaiyai marakkaadhe

thannaiyum ennaiyum unnaiyum arivaar

adhaiyum marakkaadhe

ayanum ariyum kaanaa adimudi

arivaal alandhida ninaikkaadhe

arivai alandhu vaiththavar avare

adhai nee enrum marakkaadhe

thaane uvandhu tharani vandha

dhayaaparan marakkaadhe - avar

thaale thanjam enru patrida

neeyum marakkaadhe


மனிதன் செய்ததை மறந்து விட்டால் - அது

செய் நன்றி கொன்றதாகும் - சிவ

சங்கரன் செய்ததை மறந்து விட்டால் - அது

எதனைக் கொன்றதாகும்

மறந்ததையே நீ நினைக்காமல் - அவரை

நினைக்க மறந்து விடலாம் - நீ

மறந்ததையே அவர் மறக்காமல் - உன்னை

மறக்க நினைத்து விடுவார்


கதறி கதறி அழுதாயே நீ அதனை மறக்காதே

கருணை கொண்டு அணைத்தாரே நீ அதனை மறக்காதே

கர்மவினையின் கடனாய் தவித்தாய் அதனை மறக்காதே

தர்மசீலன் தருணத்தில் காத்தான் அதனையும் மறக்காதே

உயிர்போகும் நிலையில் கூட உன் அருகிருந்து உயிர் மீட்டாரே - உன்

மதி தோற்ற விதியை மாற்றி ஒரு புனர்ஜென்மம அளித்து காத்தாரே

அன்பை தவிர வேறொன்றறியா அவரை மறக்காதே

அவரைத் தவிர அபயம் இல்லை அதனையும் மறக்காதே


நன்று நன்று நன்றென்ற வழியில் நாயகன் மறக்காதே

நன்றன்றி தீங்கொன்றும் தீண்டாது காப்பான் மறக்காதே

தன் நெஞ்சு பொய்க்காமல் அவர் செய்த நன்மையை மறக்காதே

தன்னையும் என்னையும் உன்னையும் அறிவார் அதையும் மறக்காதே

அயனும் அரியும் காணா அடிமுடி அறிவால் அளந்திட நினைக்காதே

அறிவை அளந்து வைத்தவர் அவரே அதை நீ என்றும் மறக்காதே

தானே உவந்து தரணி வந்த தயாபரன் மறக்காதே - அவர்

தாளே தஞ்சம் என்று பற்றிட நீயும் மறக்காதே

 
 
 

Recent Posts

See All
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Maa simma

Maa simma narasimma nalamaa prahlaadha varadha sri bruha narasimma piravaadha iravaadha periya varam arulum nirgunamaaga ninra...

 
 
 
Malai sootti

Malai sootti magizhvome - Sivashankarukku paamaalai sootti magizhvome manamennum thaamaraiyil bakthi malaarai kondu anbenum naareduthu...

 
 
 

Opmerkingen


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page