Mangalam -Gnaayirukkum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Gnaayirukkum oliyai koottum gnaaniyarkku mangalam
naanilamum aaluginra yogiyarkku mangalam
neyamikka niththiyaththin saayalukku mangalam
neththiraththil neruppum kulirum vaiththavarkku mangalam
sidhdharukku thalaivanaana muktharukku mangalam
jeevanukku gadhi kodukkum dhevanukku mangalam
paamararai paavanaraay aakkuvorkku mangalam
paasathirku ellaiyillaa para velikku mangalam
emmadhamum nam madhame enbavarkku mangalam
enn dhisaiyum anbinaale eerppavarkku mangalam
samratchanam seyyum dheiva sannidhikku mangalam - Siva
Shankaranaay vandha narasimmanukku mangalam
ஞாயிறுக்கும் ஒளியைக் கூட்டும் ஞானியர்க்கு மங்களம்
நாநிலமும் ஆளுகின்ற யோகியர்க்கு மங்களம்
நேயமிக்க நித்தியத்தின் சாயலுக்கு மங்களம்
நேத்திரத்தில் நெருப்பும் குளிரும் வைத்தவர்க்கு மங்களம்
சித்தருக்கு தலைவனான முக்தருக்கு மங்களம்
ஜீவனுக்கு கதி கொடுக்கும் தேவனுக்கு மங்களம்
பாமரரை பாவனராய் ஆக்குவோர்க்கு மங்களம்
பாசத்திற்கு எல்லையில்லா பர வெளிக்கு மங்களம்
எம்மதமும் நம் மதமே என்பவர்க்கு மங்களம்
எண் திசையும் அன்பினாலே ஈர்ப்பவர்க்கு மங்களம்
சம்ரட்சணம் செய்யும் தெய்வ சந்நிதிக்கு மங்களம் - சிவ
சங்கரனாய் வந்த நரசிம்மனுக்கு மங்களம்
Comments