Mangalam - Ammaiyodu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ammaiyodu appanena vandhavarkku mangalam
aasaanum dheivamumaay aanavarkku mangalam
iththarai thuyargal ellaam theerppavarkku mangalam
eeswaraavadhaara Sivashankararkku mangalam
uchchi mudhal paadham varai urugi chollum mangalam
ookkamodu aakkam tharum uththamarkku mangalam
ettu dhisai engum parai kottum pugazh mangalam
ezhulagum aazhkadalum yeththi paadum mangalam
aimpulanai aalum vazhi solbavarkku mangalam
aiyanivan aasi petra anaivarukkum mangalam
oppuvamai illaadha dhevanukku mangalam
oadhum marai potruginra oariraikku mangalam
kadavul mama enrazhaththa gangai thaaykku mangalam
karaththil dheiva regaigalai kondavarkku mangalam
vijayalakshmi annai petra vendharukku mangalam
vidhi vazhiyai dhisai thiruppum viththagarkku mangalam
mangalam jeya mangalam mangalam suba mangalam [3]
mangalam jeya mangalam puvi engilum mangalam
அம்மையோடு அப்பனென வந்தவர்க்கு மங்களம்
ஆசானும் தெய்வமுமாய் ஆனவர்க்கு மங்களம்
இத்தரைத் துயர்களெல்லாம் தீர்ப்பவர்க்கு மங்களம்
ஈஸ்வராவதார சிவசங்கரர்க்கு மங்களம்
உச்சி முதல் பாதம் வரை உருகிச் சொல்லும் மங்களம்
ஊக்கமொடு ஆக்கம் தரும் உத்தமர்க்கு மங்களம்
எட்டு திசை எங்கும் பறை கொட்டும் புகழ் மங்களம்
ஏழுலகும் ஆழ்கடலும் ஏத்தி பாடும் மங்களம்
ஐம்புலனை ஆளும் வழி சொல்பவர்க்கு மங்களம்
ஐயனிவன் ஆசி பெற்ற அனைவருக்கும் மங்களம்
ஒப்புவமை இல்லாத தேவனுக்கு மங்களம்
ஓதும் மறை போற்றுகின்ற ஓரிறைக்கு மங்களம்
கடவுள் மாமா என்றழைத்த கங்கை தாய்க்கு மங்களம்
கரத்தில் தெய்வ ரேகைகளை கொண்டவர்க்கு மங்களம்
விஜயலக்ஷ்மி அன்னை பெற்ற வேந்தருக்கு மங்களம்
விதி வழியை திசை திருப்பும் வித்தகர்க்கு மங்களம்
மங்களம் ஜெய மங்களம் மங்களம் சுப மங்களம் [3]
மங்களம் ஜெய மங்களம் புவியெங்கிலும் மங்களம்
Comments