Mandhiram ille
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Mandhiram ille thandhiram ille
aanaalum yedho nadakkudhu
mana kurangu petti paambaa
Shankaran munne kedakkudhu
yendhirama suzhanra ennai
inge kaandham izhukkudhu
sudhandhiramaa kaatra thandhu
swaasikka solludhu
kaaladiyai eduththu vechchaa
kelampaakkam pogudhu
kadavul mama kovil pona
kashtam tholaiyum engudhu
kaiya veesi nadakkalaamnaa
thaane kooppi kolludhu
kannaththile pottukittu
charanam charanam engudhu
kannirandum neer vazhiya
Shankaran mugam thedudhu - andha
karkandai suvaitha naavu
karunai thanai paadudhu
kaadhugalo Shankaran magimai
ketka alai paayudhu
ganaththa thulasi maala manam
naasi thedi alaiyudhu
neththi narambu kungumaththa
ittu kolla thudikkudhu
neril iraiyai kanda manam
kaalil veezhndhu thudhikkudhu
patri konda idhayam miga
paravasaththil aazhudhu - en
bandha paasam ellaam veli
veshaminnu theriyudhu
மந்திரமில்லே தந்திரமில்லே ஆனாலும் ஏதோ நடக்குது
மனக்குரங்கு பெட்டிப் பாம்பா சங்கரன் முன்னே கெடக்குது
எந்திரமா சுழன்ற என்னை இங்கே காந்தம் இழுக்குது
சுதந்திரமா காற்ற தந்து ஸ்வாசிக்க சொல்லுது
காலடியை எடுத்து வெச்சா கேளம்பக்கம் போகுது
கடவுள் மாமா கோவில் போனா கஷ்டம் தொலையும் என்குது
கைய வீசி நடக்கலாம்னா தானே கூப்பிக் கொள்ளுது
கன்னத்திலே போட்டுகிட்டு சரணம் சரணம் என்குது
கண்ணிரண்டும் நீர் வழிய சங்கரன் முகம் தேடுது - அந்த
கற்கண்டை சுவைத்த நாவு கருணைதனை பாடுது
காதுகளோ சங்கரன் மகிமை கேட்க அலை பாயுது
கனத்த துளசி மாலை மணம் நாசி தேடி அலையுது
நெத்தி நரம்பு குங்குமத்த இட்டுக் கொள்ள துடிக்குது
நேரில் இறையை கண்ட மனம் காலில் வீழ்ந்து துதிக்குது
பற்றிக் கொண்ட இதயம் மிக பரவசத்தில் ஆழுது - என்
பந்த பாசம் எல்லாம் வெளி வேஷமின்னு தெரியுது
Opmerkingen