Manaththil iruppavane
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Manaththil iruppavane brindhaavanaththil amarndhavane - oru
kanaththul enadhulam pariththu adhil thanai padhiththu vaiththavane
thanaththil aasaiyai veruththu uyariya thavaththil aazhnthavane
gunaththil sirandha kulaththil thonriya sirappai udaiyavane
nanaiththa vizhiyodi ninaiththa marukanam thudiththau varubavane
kalaiththa avar manam kalippil aazhndhida silirhtthu ezhubavane
sivaththa padhangalil sinaththai midhiththu azhiththu vidubavane
siriththa mugamodu kudhiththu nadamidum anaiththin naayagane
pagaiththu vaazhbavar manaththil pugundhadhai pariththu eiribavane
thigaiththu nirkira kanaththul avarule nagaiththu nirpavane
kanaththa nam sumai irakki nodiyile karaiththu vidubavane
vilaiththa seyalgalil mulaiththa vinaippayan peyarththu ozhippavane
pasiththa ulaththinil rusiththa arvurai aliththu magizhbavane
rasikkum avar manam layikka vaiththume bramikka vaippavane
kuniththa puruvane iniththa naamane Sri Sivashankarane
eduththa padham thanil izhuththu endhanai thaduththu aandavane
alikkum anbile anaiththu ulagaiyum kulikka vaippavane
silirkkum avarulam suzhatri kaigalil pidikkum maayavane
nadikkum kangalil nadaththum leelaigal adaiththu vaiththavane - anbu
pidikkul agappadum malaikku adhipadhi aana Sankarane
மனத்திலிருப்பவனே ப்ருந்தாவனத்திலமர்ந்தவனே - ஒரு
கணத்துள் எனதுளம் பறித்து அதில் தனை பதித்து வைத்தவனே
தனத்தில் ஆசையை வெறுத்து உயரிய தவத்தில் ஆழ்ந்தவனே
குணத்தில் சிறந்த குலத்தில் தோன்றிய சிறப்பையுடையவனே
நனைத்த விழியொடு நினைத்த மறுகணம் துடித்து வருபவனே
களைத்த அவர் மனம் களிப்பில் ஆழ்ந்திட சிலிர்த்து எழுபவனே
சிவத்த பதங்களில் சினத்தை மிதித்து அழித்து விடுபவனே
சிரித்த முகமொடு குதித்து நடமிடும் அனைத்தின் நாயகனே
பகைத்து வாழ்பவர் மனத்தில் புகுந்ததைப் பறித்து எறிபவனே
திகைத்து நிற்கிற கணத்துள் அவருளே நகைத்து நிற்பவனே
கனத்த நம் சுமை இறக்கி நொடியிலே கரைத்து விடுபவனே
விளைத்த செயல்களில் முளைத்த வினைப்பயன் பெயர்த்து ஒழிப்பவனே
பசித்த உளத்தினில் ருசித்த அறவுரை அளித்து மகிழ்பவனே
ரசிக்கும் அவர் மனம் லயிக்க வைத்துமே பிரமிக்க வைப்பவனே
குனித்த புருவனே இனித்த நாமனே ஸ்ரீ சிவசங்கரனே
எடுத்த பதந்தனில் இழுத்து எந்தனைத் தடுத்து ஆண்டவனே
அளிக்கும் அன்பிலே அனைத்து உலகையும் குளிக்க வைப்பவனே
சிலிர்க்கும் அவருளம் சுழற்றிக் கைகளில் பிடிக்கும் மாயவனே
நடிக்கும் கண்களில் நடத்தும் லீலைகள் அடைத்து வைத்தவனே - அன்புப்
பிடிக்குள் அகப்படும் மலைக்கு அதிபதி ஆன சங்கரனே
Bình luận