Maname nee maravaadhe
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Maname nee maravaadhe - engal
mannavanin pugazh solli maalaadhe
kanamenum thudhiyaadhu iraadhe
kaalam ponaal thirumba varaadhe
dhanamum ganamum oru naal azhiyum
kanavai polave kanaththil maraiyum
thavam thaan unaiye thalaiyil thaangum
thadumaarugaiyil idargal kalaiyum
ulaga maayaiyil nee mayangaadhe
uzhalum sagathiyil vizhundhu vidaadhe
uravugal enum pagai unakkudhavaadhe
ulagalandhaan padham unnai kai vidaadhe
thanga karam unnai alliye anaikkum
thaayinum melaay anbai surakkum
shangara dheivam vandhedhir kaakkum [siva]
sanjalamellaam nodiyil theerkkum
மனமே நீ மறவாதே - எங்கள்
மன்னவனின் புகழ் சொல்லி மாளாதே
கணமேனும் துதியாது இராதே
காலம் போனால் திரும்ப வராதே
தனமும் கனமும் ஒருநாள் அழியும்
கனவை போலவே கணத்தில் மறையும்
தவம் தான் உனையே தலையில் தாங்கும்
தடுமாறுகையில் இடர்கள் களையும்
உலக மாயையில் நீ மயங்காதே
உழலும் சகதியில் விழுந்து விடாதே
உறவுகள் எனும் பகை உனக்குதவாதே
உலகளந்தான் பதம் உன்னை கை விடாதே
தங்க கரம் உனை அள்ளியே அணைக்கும்
தாயினும் மேலாய் அன்பை சுரக்கும்
சங்கர தெய்வம் வந்தெதிர் காக்கும் [சிவ]
சங்கடம் எல்லாம் நொடியில் தீர்க்கும்
Comments