Manam thannil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Manam thannil sanjarikkum raagangale - indha
mahajothi Shankaranai paadungalen
magizhndhu jathi podum paadhangale - engal
maadhevan per solli aadungalen
mogana punnagaiyil kavarndhiduvaan - mazhai
megamena arulmaari pozhindhiduvaan
bogangal aliththu vaazha vaippaan - mana
dhaagangal theerththu unnai unarthiduvaan
ullaththai kollai kollum killaigale - raaga
uruvil vandhivanai paadungalen
kallamilaa manaththu pillaigale - konjum
pillai thamizhil paadi aadungalen
madhuraiyil uyar sanga thamizh valarththaan
magishanai kolla kaali vadiveduththaan
manidha piravi pera arul koduththaan - naam
punidharaay vaazha vazhi vaguththaan
மனம் தன்னில் சஞ்சரிக்கும் ராகங்களே - இந்த
மஹாஜோதி சங்கரனை பாடுங்களேன்
மகிழ்ந்து ஜதி போடும் பாதங்களே - எங்கள்
மாதேவன் பேர் சொல்லி ஆடுங்களேன்
மோகன புன்னகையில் கவர்ந்திடுவான் - மழை
மேகமென அருள்மாரி பொழிந்திடுவான்
போகங்கள் அளித்து வாழ வைப்பான் - மன
தாகங்கள் தீர்த்து உன்னை உணர்த்திடுவான்
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கிள்ளைகளே - ராக
உருவில் வந்திவனை பாடுங்களேன்
கள்ளமில்லா மனத்து பிள்ளைகளே - கொஞ்சும்
பிள்ளைத் தமிழில் பாடி ஆடுங்களேன்
மதுரையில் உயர் சங்க தமிழ் வளர்த்தான்
மகிஷனைக் கொல்ல காளி வடிவெடுத்தான்
மனித பிறவி பெற அருள் கொடுத்தான் - நாம்
புனிதராய் வாழ வழி வகுத்தான்
Comments