Manadhaalae Paesugiraen
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
மனதாலே பேசுகிறேன் கேட்கிறதா - அதற்கு
மனசாட்சி என்ர ஒன்று இருக்கிறதா
எனதென்று எதையும் அது சொல்கிறதா
ஏதும் தன்னுள் மறைத்து வைக்கிறதா
கனவிலும் உன் நினைவென்று கதைக்கிறதா
காட்சியில் நீ நிற்பதை அது அறிகிறதா
பணம் காசு வேண்டி வந்து நிற்கிறதா - நல்ல
பண்பை என்னுள் வை என்று கேட்கிறதா
பேதங்கள் ஏதும் அது பார்க்கிறதா - தற்
பெருமையிலே கர்வம் கொண்டு திரிகிறதா
வேஷங்கள் போட்டு உன்னை ஏய்க்கிறதா - உனை
வேத நாயகன் என்ரு உணர்கிறதா
உருகி உருகிக் கரைந்துஅழுகிறதா
உன்னையே தெய்வம் எனத் தொழுகிறதா
மருகி மருகி நெஞ்சுள்ளே குமைகிறதா
மனம் போன பாதையெல்லாம் போகிறதா
கெடுதி ஏதும் செய்ய பயப்படுகிறதா
கேளாமல் பணிவிடைகள் செய்கிறதா
சடுதியிலே திருந்திவிட நினைக்கிறதா
சங்கரமே உனில் தன்னை இணைக்கிறதா
Comments