Malaiyappan Theruvinile
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
மலையப்பன் தெருவினிலே மகான் ஒருவர் வீடு
மகரந்தம் மணந்திருக்கும் மல்லிகை முல்லைக்காடு
வள்ளலிவன் புகழையெல்லாம் வாழ்த்துதம்மா ஏடு- அதை
வாயாரப்பாட வந்தாள் சாகுந்தலப் பேடு
இமயமலைமேலே இவன் நாமம் சிவனாம்
ஏழுமலைமேலே இவனே வேங்கடனாம்
சபரிமலைதனிலே சாஸ்தாவாய் அருள்வான்
சரவணனாய்ப் பழனியெனும் தலமதிலே திகழ்வான்
விஜயலக்ஷ்மி தாயாள் பெற்றதொரு பிள்ளை
வேதத்தின் சாரத்தைக் கூற வந்த கிள்ளை
ஆனந்த சாகரத்தின் கரை காணா எல்லை
அண்ணலிவன் அன்பினுக்கு உபமானம் இல்லை
Comments