Kumbaabishegam kondaane
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kumbaabishegam kondaane - Sri Siva Shankaran
kodi kodi janam kuraiyatru vaazhndhida
govindhan padhamthanil adaikkalam thandhida
vaadum payir sezhikka vandha peru mazhaipol
vaamananaaga vandha syamala kannanivan
kaliyin kodumaiyile avadhiyurum maandhar
kadharum kural kettu padhari oadi vandhu
nadhiyai kaatrai pol palan edhirpaaraadha
nara narayanan varam tharave irangi
thanakkena oar pudhu ulagam amaiththu
thannai nambiyorkkidam adhil alilththu
ninaikka onnaadha kalai thiranudane
punaitha koyilil puththoli thandhida
kaiyil avadhaara chinnangal thaangi
karunai enum kadalai kannil ul vaangi
parithanil valam varum kalki avadhaaran
padhaththil gadhi thara vandhen vandhen ena
aadhiseshan kudai pidithu nirkavum
azhagaay garudan valam vandhidavum
dheva thundhubi gosham muzhangida
dhevargal poomaari pozhindhu magizhndhida
kann petra payanai inru petravargal
kaliyugam mudindhu pudhu yugam kandavar
thannilai marandhu thazhuvi magizh kannan
mannile udhitha mahimaithanai paada
கும்பாபிஷேகம் கொண்டானே - ஸ்ரீ சிவ சங்கரன்
கோடி கோடி ஜனம் குறையற்று வாழ்ந்திட
கோவிந்தன் பதம்தனில் அடைக்கலம் தந்திட
வாடும் பயிர் செழிக்க வந்த பெருமழைபோல்
வாமனனாக வந்த சியாமளக் கண்ணனிவன்
கலியின் கொடுமையிலே அவதியுறும் மாந்தர்
கதறும் குரல் கேட்டுப் பதறி ஓடி வந்து
நதியைக் காற்றைப்போல் பலன் எதிர்பாராத
நர நாராயணன் வரம் தரவே இறங்கி
தனக்கென ஓர் புது உலகம் அமைத்து
தன்னை நம்பியோர்க்கிடம் அதிலளித்து
நினைக்கவொண்ணாத கலைத்திறனுடனே
புனைத்த கோயிலில் புத்தொளி தந்திட
கையில் அவதாரச் சின்னங்கள் தாங்கி
கருணை எனும் கடலை கண்ணில் உள் வாங்கி
பரிதனில் வலம் வரும் கல்கி அவதாரன்
பதத்தில் கதிதர வந்தேன் வந்தேன் என
ஆதிசேஷன் குடை பிடித்து நிற்கவும்
அழகாய் கருடன் வலம் வந்திடவும்
தேவ துந்துபி கோஷம் முழங்கிட
தேவர்கள் பூமாரி பொழிந்து மகிழ்ந்திட
கண்பெற்ற பயனை இன்று பெற்றவர்கள்
கலியுகம் முடிந்து புது யுகம் கண்டவர்
தன்னிலை மறந்து தழுவி மகிழ் கண்ணன்
மண்ணிலே உதித்த மஹிமைதனைப் பாட
Kommentarer