Krishna brindhavanamo
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Krishna brindhavanamo
sangeetha nandhavanamo
kannanin aalayamo - evar
gavanamum avan vayamo
manangalin sangamamo - ivan
madhamum sanaadhanamo
arulenum perungkadalo - neela
aagaayam avanudalo
imaya panikuliro - pudhidhaay
ezhundha ilanthaliro
amaidhi tharum suramo - idhu
aanandha saagaramo
sanjalam agal nilamo
saadhagar ser thalamo
mangalam tharum karamo - Siva
shankaran arul varamo
கிருஷ்ண ப்ருந்தாவனமோ
சங்கீத நந்தவனமோ
கண்ணனின் ஆலயமோ - எவர்
கவனமும் அவன் வயமோ
மனங்களின் சங்கமமோ - இவன்
மதமும் சனாதனமோ
அருளெனும் பெருங்கடலோ - நீல
ஆகாயம் அவனுடலோ
இமயப் பனிக்குளிரோ - புதிதாய்
எழுந்த இளந்தளிரோ
அமைதி தரும் சுரமோ - இது
ஆனந்த சாகரமோ
சஞ்சலம் அகல் நிலமோ
சாதகர் சேர் தலமோ
மங்கலம் தரும் கரமோ - சிவ
சங்கரன் அருள் வரமோ
Comentários