Kotti kidakkudhamma
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kotti kidakkudhamma kann kollaa perazhagu
kothaiyival magimaigalellaam korka vandha sollazhagu
thatti enai thuyil kalaiththa thaayavalin anbazhagu
tharunamarindhaala vandha thaalaadha arulazhagu
mettiyisai paada varum moginiyaal nadai azhagu
minnalena namai eerkkum meen vizhiyin kadaiyazhagu
muththukkal sidhari vizhum muruvalo adhyazhagu
muththamizhum varunikkum mogana idhazhazhagu
karunagam kudai pidikkum karumaari mugam azhagu
karunkuvalai kann malarin kaatchi tharum vandazhagu
arumaiyudan namai kaakkum annaiyival poruppazhagu
ammai Sivashankariyaall aanandha nagaiyazhagu
கொட்டிக் கிடக்குதம்மா கண்கொள்ளாப் பேரழகு
கோதயிவள் மகிமைகளெல்லாம் கோர்க்க வந்த சொல்லழகு
தட்டி எனைத் துயில் கலைத்த தாயவளின் அன்பழகு
தருணமறிந்தாள வந்த தாளாத அருளழகு
மெட்டியிசை பாட வரும் மோகினியாள் நடையழகு
மின்னலென நமை ஈர்க்கும் மீன் விழியின் கடையழகு
முத்துக்கள் சிதறி விழும் முறுவலோ அதியழகு
முத்தமிழும் வருணிக்கும் மோகன இதழழகு
கருநாகம் குடை பிடிக்கும் கருமாரி முகம் அழகு
கருங்குவளைக் கண்மலரின் காட்சி தரும் வண்டழகு
அருமையுடன் நமைக் காக்கும் அன்னையிவள் பொறுப்பழகு
அம்மை சிவசங்கரியாள் ஆனந்த நகையழகு
Comments