Kodi kodi yugangalaaga
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kodi kodi yugangalaaga kori ninra varamonru
kondu vandhu thandhadhamma naan kumbidum iraiyonru
thedi thedi alaivadhellaam thevaiyo inimele
dhevan Sivashankaran solle thenin iniya suvai pole
vaadi ninra mugaththai kandu vaanininru vandhaano
valllavanaay thollaigatkellaam ellaiyonru kandaano
paadi magizha endhan naavil painthamizhaay ninraano
paavi endhan theevinai ellaam paarvaiyile konraano
kandhai manam thannil paadal sandham thaane thandhaano
sindhai nondhu ninra podhun sondham naane enraano
vandhu pogum uravil bandham vaiyaadhe enraano
undhum aasai vittu thavaththil mundhu enruraiththaano
கோடி கோடி யுகங்களாக கோரி நின்ற வரமொன்று
கொண்டு வந்து தந்ததம்மா நான் கும்பிடும் இறையொன்று
தேடித்தேடி அலைவதெல்லாம் தேவையோ இனிமேலே
தேவன் சிவசங்கரன் சொல்லே தேனின் இனிய சுவை போலே
வாடி நின்ற முகத்தைக் கண்டு வானினின்று வந்தானோ
வல்லவனாய் தொல்லைகட்கெல்லாம் எல்லையொன்று கண்டானோ
பாடி மகிழ எந்தன் நாவில் பைந்தமிழாய் நின்றானோ
பாவி எந்தன் தீவினை எல்லாம் பார்வையிலே கொன்றானோ
கந்தைமனம் தன்னில் பாடல் சந்தம் தானே தந்தானோ
சிந்தை நொந்து நின்ற போதுன் சொந்தம் நானே என்றானோ
வந்து போகும் உறவில் பந்தம் வையாதே என்றானோ
உந்தும் ஆசை விட்டு தவத்தில் முந்து என்றுரைத்தானோ
Comments