Kodi kodi dheivamum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kodi kodi dheivamum neeye kodi magaane
kodi kodi uyirinamum nee kodi magaane
kodi kodi kaalam vaazhndhaay kodi magaane
kodi kodi arpudham seidhaay kodi magaane
paavi endhan theevinai thaano kodi magaane - nin
paadham theendi arindhenillai kodi magaane
aavi uruga thaviththu ninren kodi magaane - un
aanma adhai arindhidumo kodi magaane
kodi kodi makkalin kanneer kodi magaane
oadi kadalaay perugudhaiyaa kodi magaane
yengum makkal manaththai arindhaay kodi magaane - nee
engal Sivashankaril vandhaay kodi magaane
guru sishya baavam thannai kodi magaane
kuvalayame unarndhida vaiththaay kodi magaane
kullaavodu paadhugai thandhu kodi magaane - engal
komaganai vaazhthi senraay kodi magaane
annal Sivashankarinulle kodi magaane
aiyan un jothi kandom kodi magaane
meyyan un sidhdhigalellaam kodi magaane - engal
menmaganukkaruli vittaay kodi magaane
கோடி கோடி தெய்வமும் நீயே கோடி மகானே
கோடி கோடி உயிரினமும் நீ கோடி மகானே
கோடி கோடி காலம் வாழ்ந்தாய் கோடி மகானே
கோடி கோடி அற்புதம் செய்தாய் கோடி மகானே
பாவி எந்தன் தீவினை தானோ கோடி மகானே - நின்
பாதம் தீண்டி அறிந்தேனில்லை கோடி மகானே
ஆவி உருகத் தவித்து நின்றேன் கோடி மகானே - உன்
ஆன்மா அதை அறிந்திடுமோ கோடி மகானே
கோடி கோடி மக்களின் கண்ணீர் கோடி மகானே
ஓடி கடலாய்ப் பெருகுதையா கோடி மகானே
ஏங்கும் மக்கள் மனத்தையறிந்தாய் கோடி மகானே - நீ
எங்கள் சிவசங்கரில் வந்தாய் கோடி மகானே
குரு சிஷ்ய பாவம் தன்னைக் கோடி மகானே
குவலயமே உணர்ந்திட வைத்தாய் கோடி மகானே
குல்லாவோடு பாதுகை தந்து கோடி மகானே - எங்கள்
கோமகனை வாழ்த்திச் சென்றாய் கோடி மகானே
அண்ணல் சிவசங்கரினுள்ளே கோடி மகானே
ஐயன் உன் ஜோதி கண்டோம் கோடி மகானே
மெய்யன் உன் சித்திகளெல்லாம் கோடி மகானே - எங்கள்
மேன்மகனுக்கருளி விட்டாய் கோடி மகானே
Comments