top of page

Kobiththu kondaalum

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kobiththu kondaalum paravaayillai - baba

kuraiyinri vaazha vaiththaay illai thollai

sthaabiththu vittaay un saamrajyaththai - oaridam

kaanbiththu vittaay ini kavalai illai - adhanal


kandu kollave illai paravaayillai - un

kaatchi enakku arulavillai paravaayillai - enai

thondu seyya azhaikkavillai paravaayillai - un

thooya ullam purivadhanaal paravaayillai - appa


kandapadi thittinaalum paravaayillai - unai

kandu konden thandhaiyenru paravaayillai - nam

sandaiyellaam enraikkum saasvadhamillai - anbu

sandhaiyile kodukkal vaangal paravaayillai - adhanaal


gnaanaththai thandhu vittaay bayame yillai - sthoola

dhegaththai azhiththu vidu paravaayillai - moola

moanaththai aliththu vittaay mudiveyillai - uyir

moochinile kalandhu vidu paravaayillai - appa


dharma rajanaagi vittaay paravaayillai - un

thandanaiyai thodangi vittaay paravaayillai - aathma

dharmam kaakka unnai vittaal yaarum illai - suya

dharmaththinai bodhikka aaleyillai - adhanaal


kannanaaga irukkum varai premam premam - nee

budhdhanaaga amarndhu vittaal maunam maunam - naam

vilaiyaada idhuvallavo neram neram - indha

velaithanai vittu vittaal varumo kaalam - enave


கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை - பாபா

குறையின்றி வாழ வைத்தாய் இல்லை தொல்லை

ஸ்தாபித்து விட்டாய் உன் சாம்ராஜ்யத்தை - ஓரிடம்

காண்பித்து விட்டாய் இனி கவலையில்லை - அதனால்


கண்டு கொள்ளவே இல்லை பரவாயில்லை - உன்

காட்சி எனக்கு அருளவில்லை பரவாயில்லை - எனை

தொண்டு செய்ய அழைக்கவில்லை பரவாயில்லை - உன்

தூய உள்ளம் புரிவதனால் பரவாயில்லை - அப்பா


கண்டபடி திட்டினாலும் பரவாயில்லை - உனை

கண்டு கொண்டேன் தந்தையென்று பரவாயில்லை - நம்

சண்டையெல்லாம் என்றைக்கும் சாஸ்வதமில்லை - அன்பு

சந்தையிலே கொடுக்கல் வாங்கல் பரவாயில்லை - அதனால்


ஞானத்தை தந்து விட்டாய் பயமேயில்லை -ஸ்தூல

தேகத்தை அழித்து விடு பரவாயில்லை - மூல

மோனத்தை அளித்து விட்டாய் முடிவேயில்லை - உயிர்

மூச்சினிலே கலந்து விடு பரவாயில்லை - அப்பா


தர்மராஜனாகி விட்டாய் பரவாயில்லை - உன்

தண்டனையை தொடங்கி விட்டாய் பரவாயில்லை - ஆத்ம

தர்மம் காக்க உன்னை விட்டால் யாரும் இல்லை - சுய

தர்மத்தினை போதிக்க ஆளேயில்லை - அதனால்


கண்ணனாக இருக்கும் வரை ப்ரேமம் ப்ரேமம் - நீ

புத்தனாக அமர்ந்து விட்டால் மௌனம் மௌனம் - நாம்

விளையாட இதுவல்லவோ நேரம் நேரம் - இந்த

வேளைதனை விட்டு விட்டால் வருமோ காலம் - எனவே









 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page