Kayilai valam vandha
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kayilai valam vandha punidhan thiruppaadham
panindhu ezhuvomadi - indha
agilam thanai aala anbu mayamaagum
adhipan padham serave
irulai oliyaakki oliyil arasaaatchi
puriyum Sivashankaran - ingu
karunai kadalaagum arulil pulanaagum
guruvin padham seradi
anbai pozhiginra kanaigal pala nammel
yevi sirippaanadi - nammai
mevi sirippaanadi - andha
sirippin oli kettu thuyaram parandhodum
unmai idhu thaanadi - andha
unmai idhu thaanadi
arivu sudaraagi parivu vadivaagi
arugil varuvaanadi - avan
varavil malarginra ulagam anbu
Sivashankar mayamaagume
kalla sirippaalen ullamenum koyil
mella pugundhaanadi - avan
mella pugundhaanadi -avan
alla kuraiyaadha selva nilai koottum
vallal perumaanadi - avan
vallal perumaanadi
arinai malaiyaala sabarimalai yezhumalaiyum
valam vandhavan - pazhani malaiyum
valam vandhavan
badhri kedhaarum mukthi amarnaaththum
punidha thalam senravan - visvam
vaazha thavam seibavan
கயிலை வலம் வந்த புனிதன் திருப்பாதம்
பணிந்து எழுவோமடி - இந்த
அகிலம் தனையாள அன்பு மயமாகும்
அதிபன் பதம் சேரவே
இருளை ஒளியாக்கி ஒளியில் அரசாட்சி
புரியும் சிவசங்கரன் - இங்கு
கருணை கடலாகும் அருளில் புலனாகும்
குருவின் பதம் சேரடி
அன்பை பொழிகின்ற கணைகள் பல நம்மேல்
ஏவி சிரிப்பானடி - நம்மை மேவி சிரிப்பானடி - அந்த
சிரிப்பின் ஒலி கேட்டு துயரம் பறந்தோடும்
உண்மை இதுதானடி - அந்த உண்மை இதுதானடி
அறிவு சுடராகி பரிவு வடிவாகி
அருகில் வருவானடி - அவன்
வரவில் மலர்கின்ற உலகம் அன்பு
சிவசங்கர் மயமாகுமே
கள்ளச் சிரிப்பாலென் உள்ளமெனும் கோயில்
மெள்ள புகுந்தானடி - அவன் மெள்ள புகுந்தானடி - அவன்
அள்ளக் குறையாத செல்வ நிலை கூட்டும்
வள்ளல் பெருமானடி - அவன் வள்ளல் பெருமானடி
அரிணை மலையாள சபரிமலை ஏழுமலையும்
வலம் வந்தவன் - பழனி மலையும் வலம் வந்தவன்
பத்ரி கேதாரும் முக்தி அமர்நாத்தும்
புனித தலம் சென்றவன் - விஸ்வம் வாழ தவம் செய்பவன்
Comments