top of page

Kaththum kuyilosai

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kaththum kuyilosai muzhangidum

sutrum malar kaatchi serindhidum

meththa kalai unarvu vilangidum

rama rajjiyam Shankaran rama rajjiyam


paththum padhinaaraay perugidum

suththam sugaadhaaram eerththidum

niththam pudhu azhagu thulangidum

rama rajjiyam Shankaran rama rajjiyam


ettum kaigalile irangidum

thottu dhinam anbaay pesidum

kuttum karam kuraigal pokkidum

rama rajjiyam Shankaran rama rajjiyam


pattum padaamalum iru enum

mattuppadum aravurai kooridum

ettu thikkum pugazh paravidum

rama rajjiyam Shankaran rama rajjiyam


vaazhvai thavamaaga maatridum

thaazhvonrillaadhe seidhidum

aazhnilaiyil thannai unarththidum

rama rajjiyam Shankaran rama rajjiyam


madhamennum thirai kizhiththidum

manidhaththin neyam unarththidum

idhamaaga pesi anaiththidum

rama rajjiyam Shankaran rama rajjiyam


anbu karam neetti azhaithidum

arulaale thuyargal theerththidum

panbaale ullam kavarndhidum

rama rajjiyam Shankaran rama rajjiyam


muththamizh kalaigal valarththidum

niththam oru pudhumai nigazhthidum

saththaminri thondugal seidhidum

rama rajjiyam Shankaran rama rajjiyam


கத்தும் குயிலோசை முழங்கிடும்

சுற்றும் மலர்க்காட்சி செறிந்திடும்

மெத்தக் கலை உணர்வு விளங்கிடும்

ராம ராஜ்ஜியம் சங்கரன் ராம ராஜ்ஜியம்


பத்தும் பதினாறாய் பெருகிடும்

சுத்தம் சுகாதாரம் ஈர்த்திடும்

நித்தம் புது அழகு துலங்கிடும்

ராம ராஜ்ஜியம் சங்கரன் ராம ராஜ்ஜியம்


எட்டும் கைகளிலே இறங்கிடும்

தொட்டுத் தினம் அன்பாய் பேசிடும்

குட்டும் கரம் குறைகள் போக்கிடும்

ராம ராஜ்ஜியம் சங்கரன் ராம ராஜ்ஜியம்


பட்டும் படாமலும் இரு எனும்

மட்டுப்படும் அறவுரை கூறிடும்

எட்டுத் திக்கும் புகழ் பரவிடும்

ராம ராஜ்ஜியம் சங்கரன் ராம ராஜ்ஜியம்


வாழ்வை தவமாக மாற்றிடும்

தாழ்வொன்றில்லாதே செய்திடும்

ஆழ்நிலையில் தன்னை உணர்த்திடும்

ராம ராஜ்ஜியம் சங்கரன் ராம ராஜ்ஜியம்


மதமென்னும் திரை கிழித்திடும்

மனிதத்தின் நேயம் உணர்த்திடும்

இதமாக பேசி அணைத்திடும்

ராம ராஜ்ஜியம் சங்கரன் ராம ராஜ்ஜியம்


அன்புக்கரம் நீட்டி அழைத்திடும்

அருளாலே துயர்கள் தீர்த்திடும்

பண்பாலே உள்ளம் கவர்ந்திடும்

ராம ராஜ்ஜியம் சங்கரன் ராம ராஜ்ஜியம்


முத்தமிழ் கலைகள் வளர்த்திடும்

நித்தம் ஒரு புதுமை நிகழ்த்திடும்

சத்தமின்றி தொண்டுகள் செய்திடும்

ராம ராஜ்ஜியம் சங்கரன் ராம ராஜ்ஜியம்


 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page