Karunai pozhiyum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Thaalelo nee thaalelo
Karunai pozhiyum kaarmugilae
thaalelo nee thaalelo
iravum pagalum dharisanam nee
koduththu koduththu kalaiththaayo
vizhiththirundhadhu podhum
kanne en Sivashankara
kaaichi kurukkiya paalo
gandham yaerum pani neero
eeshwaran thandha nidhiyo
eeshwari yaendhum kiliyo
puththam pudhu pavala kodiyo
siru kiligal konjum mozhiyo
saayndhu aadidum mayilo
madhu panjamam paadum kuyilo
vizhiththirundhadhu podhum
kanne en Sivashankara
senthamizhe thenmozhiye
kaniyamudhe karkande
thaalaattu paadugiraen
dheivame nee kannurangu
thooyavane kamala kannaa
en kuzhandhaay nee vaaraay
nee urangum naeramidhe
kann valaraay kannmaniye
vizhiththirundhadhu podhum
kanne en Sivashankara
தாலேலோ நீ தாலேலோ
கருணை பொழியும் கார்முகிலே
தாலேலோ நீ தாலேலோ
இரவும் பகலும் தரிசனம் நீ கொடுத்து கொடுத்து களைத்தாயோ
விழித்திருந்தது போதும் கண்ணே என் சிவசங்கரா
காய்ச்சி குறுக்கிய பாலோ கந்தம் ஏறும் பனி நீரோ
ஈஸ்வரன் தந்த நிதியோ ஈஸ்வரி ஏந்தும் கிளியோ
புத்தம் புது பவள கொடியோ சிறு கிளிகள் கொஞ்சும் மொழியோ
சாய்ந்து ஆடிடும் மயிலோ மது பஞ்சமம் பாடும் குயிலோ
விழித்திருந்தது போதும் கண்ணே என் சிவசங்கரா
செந்தமிழே தேன்மொழியே கனியமுதே கற்கண்டே
தாலாட்டு பாடுகிறேன் தெய்வமே நீ கண்ணுறங்கு
தூயவனே கமலக்கண்ணா என் குழந்தாய் நீ வாராய்
நீ உறங்கும் நேரமிதே கண் வளராய் கண்மணியே
விழித்திருந்தது போதும் கண்ணே என் சிவசங்கரா
Comments