top of page

Karumugilgal

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Karumugilgal urangi ezhum ezhirkelai

galgalena paravai oli ezhum kaalai

kana kana maniyosai seyum velai

kaviyarasan Sivashankararkoru maalai


palapalena oli sidharum vizhivaargal - kandu

padapadena thudai nadungi pani kolgal

kadakadena avan nagaippu udhir theeyil

gidu gidu venraadidume puvi vergal


galagalenum silambosai paraalode

salasalakkum nadhigalellaam isai paadum

thalathalena kodhikkinra manamellaam

kulukulu venraagidume ivan neril


mana manakkum thiruneetrin magimai solli

gamagamakkum thenralivan pugazh paadum

minu minukkum vinmeengal kan chimitti

thimi thimi thimiyenru nadam aadum


thaga thagena ezhundhu varum sooriyanukkul

muga malaro thaamaraiyaay malarndhu kaanum

agam puramum oththu vaazh ulaga maandhar

adi malarin padham perave venduvaare



கருமுகில்கள் உறங்கி எழும் எழிற்கேளை

கலகலென பறவை ஒலி எழும் காலை

கணகண மணியோசை செயும் வேளை

கவியரசன் சிவசங்கரர்க்கொரு மாலை


பளபளென ஒளி சிதறும் விழிவார்கள் - கண்டு

படபடென துடை நடுங்கிப் பணி கோள்கள்

கடகடென அவன் நகைப்பு உதிர் தீயில்

கிடுகிடு வென்றாடிடுமே புவி வேர்கள்


கலகலெனும் சிலம்போசைப் பரலோடே

சலசலக்கும் நதிகளெல்லாம் இசை பாடும்

தளதளெனக் கொதிக்கின்ற மனமெல்லாம்

குளுகுளு வென்றாகிடுமே இவன் நேரில்


மணமணக்கும் திருநீற்றின் மகிமை சொல்லி

கமகமக்கும் தென்றலிவன் புகழ்பாடும்

மினுமினுக்கும் விண்மீன்கள் கண்சிமிட்டி

திமிதிமி திமியென்று நடம் ஆடும்


தகதகென எழுந்து வரும் சூரியனுக்குள்

முகமலரோ தாமரையாய் மலர்ந்து காணும்

அகம் புறமும் ஒத்து வாழ் உலக மாந்தர்

அடி மலரின் பதம் பெறவே வேண்டுவாரே

 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comentários


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page