Karpaga tharuvo
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Karpaga tharuvo ivan kaamadhenuvo
karunai mugilo ivan eliyor pugalo
sorpadham kadandha jothi vadivaanavano - pudhu
sorgam padaithu adhai namakkalippavano
karpagavalli thandha ganapathi ivano
gaana kuraththi valli konda manavano
narpadham tharave nammai koovuginravano - indha
naadha brammamthaan Sri Siva shankarano
arpa manaththaraam nammai alli anaikkiraan
aanandha kadalil thalli aada vaikkiraan
sirparan nidhamum dheiva silaigal vadikkiraan - nam
sindhanai ulle ivan siragadikkiraan
கற்பகத் தருவோ இவன் காமதேனுவோ
கருணை முகிலோ இவன் எளியோர் புகலோ
சொற்பதம் கடந்த ஜோதி வடிவானவனோ - புது
சொர்க்கம் படைத்து அதை நமக்களிப்பவனோ
கற்பகவல்லி தந்த கணபதி இவனோ
கானக் குறத்தி வள்ளி கொண்ட மணவனோ
நற்பதம் தரவே நம்மை கூவுகின்றவனோ - இந்த
நாத ப்ரம்மம் தான் ஸ்ரீ சிவ சங்கரனோ
அற்ப மனத்தராம் நம்மை அள்ளி அணைக்கிறான்
ஆனந்தக் கடலில் தள்ளி ஆட வைக்கிறான்
சிற்பரன் நிதமும் தெய்வச் சிலைகள் வடிக்கிறான் - நம்
சிந்தனை உள்ளே இவன் சிறகடிக்கிறான்
Comentários