Karaikku poganum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Karaikku poganum vaanga neelan
karaikku poganum vaanga
kattu maraththula kundhiyiruppadhu
eththanai kaalam thaanga - neelaan
karaikku poganum vaanga
kaththum kadalil suththi thirivadhu...
yelelo ailasaa yelelo ailasaa
kaththum kadalil suththi thirivadhu
eththanai kaalam thaanga - neelaan
karaikku pooganum vaanga
ovvoru jeevanum innoru jeevanin
unavu pandamaay pochu - idhu
kadalin dharmamaay aachchu
jivvunu yerudhu sooriyan uchiyil...
yelelo ailasaa yelelo ailasaa
jivvunu yerudhu sooriyan uchiyil
chiththira vadhaiyaay aachu - namma
niththirai enbadhum pochchu
kondhalikkum kadal kondhalikkum manam
kondhalikkum namma vaazhvu - nammai
kolla thudikkudhu novu
thandhana thaanana thayyanaththaa enru...
yelelo ailasaa yelelo ailasaa
thandhana thaanana thayyanaththaa enru
paada thudikkudhu naavu - nammai
saada thudikkudhu saavu
suththiyadikkudhu suththiyadikudhu
sooravali perunkaaththu - nammai
suththilum peigalin kooththu
neththi kodhikkudhu nenju padhaikkudhu....
yelelo ailasaa yelelo ailasaa
neththi kodhikkudhu nenju padhaikkudhu
niththamum eththanai paadu - ada
eppadi thaangum ikkoodu
shankara jothiyai kannula nee vachchu
thaththalikkum kadal thaandu - ulle
saththiya dheebaththai thoondu
mangala dhevane shankara dhevane...
yelelo ailasaa yelelo ailasaa
mangala dhevane shankara dhevane
unnarul thaa enru vendu - indha
uppu samudhiram thaandu
கரைக்குப் போகணும் வாங்க - நீலாங்
கரைக்குப் போகணும் வாங்க
கட்டு மரத்துல குந்தியிருப்பது
எத்தனை காலம் தாங்க - நீலாங்
கரைக்குப் போகணும் வாங்க
கத்தும் கடலில் சுத்தி திரிவது....
ஏலேலோ ஐலஸா ஏலேலோ ஐலஸா
கத்தும் கடலில் சுத்தி திரிவது
எத்தனை காலம் தாங்க - நீலாங்
கரைக்குப் போகணும் வாங்க
ஒவ்வொரு ஜீவனும் இன்னொரு ஜீவனின்
உணவுப் பண்டமாய்ப் போச்சு - இது
கடலின் தர்மமாய் ஆச்சு
ஜிவ்வுனு ஏறுது சூரியன் உச்சியில்....
ஏலேலோ ஐலஸா ஏலேலோ ஐலஸா
ஜிவ்வுனு ஏறுது சூரியன் உச்சியில்
சித்திர வதையாய் ஆச்சு - நம்ம
நித்திரை என்பதும் போச்சு
கொந்தளிக்கும் கடல் கொந்தளிக்கும் மனம்
கொந்தளிக்கும் நம்ம வாழ்வு - நம்மைக்
கொல்லத் துடிக்குது நோவு
தந்தனத் தானன தய்யனத்தா என்று....
ஏலேலோ ஐலஸா ஏலேலோ ஐலஸா
தந்தனத் தானன தய்யனத்தா என்று
பாடத் துடிக்குது நாவு - நம்மை
சாடத் துடிக்குது சாவு
சுத்தியடிக்குது சுத்தியடிக்குது
சூறாவளிப் பெருங்காத்து - நம்மைச்
சுத்திலும் பேய்களின் கூத்து
நெத்தி கொதிக்குது நெஞ்சு பதைக்குது....
ஏலேலோ ஐலஸா ஏலேலோ ஐலஸா
நெத்தி கொதிக்குது நெஞ்சு பதைக்குது
நித்தமும் எத்தனை பாடு - அட
எப்படித் தாங்கும் இக்கூடு
சங்கர ஜோதியை கண்ணுல நீ வச்சு
தத்தளிக்கும் கடல் தாண்டு - உள்ளே
சத்திய தீபத்தைத் தூண்டு
மங்கல தேவனே சங்கர தேவனே....
ஏலேலோ ஐலஸா ஏலேலோ ஐலஸா
மங்கல தேவனே சங்கர தேவனே
உன்னருள் தா என்று வேண்டு - இந்த
உப்புச் சமுத்திரம் தாண்டு
Comments