Kannasaivile Ulagai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
கண்ணசைவிலே உலகை நீ படைத்து
கருத்துக்கிசைந்தபடி வடிவமைத்து
கையசைவிலே வாழ்வு நீ கொடுத்து - நின்
காலடியிலே வைத்து அருள்வாயே
மண்ணில் சுழல் மாயைதனை மாய்த்திடவே
மங்கள ரூபமொடு வந்தவனே
எண்ணிலாத அறவுரை தினம் சொல்லி
எங்களையும் ஆட்கொள்ள வந்தவனே
மந்திரங்கள் ஓத மடி மீதமர்ந்து
மங்கை ஒரு பாகன் உருவானவனே
தந்திரம் பல செய்து விளையாடி
நங்கை வள்ளியாளை மணம் கொண்டவனே
காரின் நிற மாமனவன் கண்மணியே
கார்த்திகை மாதர் வளர்த்த பொன் மணியே
நீறணிந்த மேனியனே நிர்மலனே
நித்யானந்தனே சிவ சங்கரனே -திரு
நீறணிந்த மேனியனே நிர்மலனே
நித்யானந்தனே சிவ சங்கரனே
Comments