Kannanaagi Budhdhanaagi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
thaththithom thakathimi thaththithom
aanandham
nenjinil aanandham
ninaivinil aanandham
nilaiththidum aanandham
kannanaagi budhdhanaagi kalkiyaanavan
kanukkulle kadhiravanum nilavum kondavan
mannanaagi maganumaagi magaanaanavan - ivan
mannadiyil udhitha maha jothiyaanavan
vaanumaagi mannumaagi vazhiyumaanavan
vanna vanna poovumaagi kaniyumaanavan
neerumaagi neruppumaagi nijamumaanavan
neeyumaagi naanumaagi anaiththumaanavan
thelumaagi thenumaagi theraiyaanavan
vaalumaagi ezhudhuginra kolumaanavan
kollumaagi ennangalin kolamaanavan - ivan
kulumaiyaagi yoga theeyil kuliththu nirpavan
kalaiyumaagi chandhiranai thalaiyil vaiththavan
gangai enum mangaithanai sumandhu nirpavan
silaiyumaagi chithambaraththil aadi nirpavan - ivan
sindhaiyaagi sandhamaagi kavidhaiyaanavan
தத்தித்தோம் தகதிமி தத்தித்தோம்
ஆனந்தம் ....
நெஞ்சினில் ஆனந்தம்
நினைவினில் ஆனந்தம்
நிலைத்திடும் ஆனந்தம்
கண்ணனாகி புத்தனாகி கல்கியானவன்
கண்ணுக்குள்ளே கதிரவனும் நிலவும் கொண்டவன்
மன்னனாகி மகனுமாகி மகானானவன் - இவன்
மண்ணடியில் உதித்த மகா ஜோதியானவன்
வானுமாகி மண்ணுமாகி வழியுமானவன்
வண்ண வண்ண பூவுமாகி கனியுமானவன்
நீருமாகி நெருப்புமாகி நிஜமுமானவன்
நீயுமாகி நானுமாகி அனைத்துமானவன்
தேளுமாகி தேனுமாகி தேரையானவன்
வாளுமாகி எழுதுகின்ற கோலுமானவன்
கோளுமாகி எண்ணங்களின் கோலமானவன் - இவன்
குளுமையாகி யோகத்தீயில் குளித்து நிற்பவன்
கலையுமாகி சந்திரனை தலையில் வைத்தவன்
கங்கை எனும் மங்கைதனை சுமந்து நிற்பவன்
சிலையுமாகி சிதம்பரத்தில் ஆடி நிற்பவன் - இவன்
சிந்தையாகி சந்தமாகி கவிதையானவன்
Comments