top of page

Kanna unnai thedi

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kanna unnai thedi thedi kandu pidikkonum

kannil vaiththu imaiyaal moodi paadhu kaakka venum

ponne undhan puzhudhi padindha meni thudaikkonum

pooppola naan unai neeraatti pottu vaikka venum


pachchai pattu idaiyil katti paarththu poorikkonum

pachchai pulla unnai naandhaan alangarikka venum

thalayai vaari kondai pottu peeli sootta venum

thaavi varum kaalgalil thandai galeer enga venum


kaadhugalil kundalam aada oadi vara venum

kazhuththil rathna haaram sootti kandu rasikkonum

netriyile sutti vaiththu ninru paarkka venum

neela meni azhaginile naan nenjam urugonum


koduththu koduththu sivandha kaiyai pidichchu varudoonum

konjum undhan mazhalai pechchai kettu rasikkonum

iduppil unnai thookki vaiththu iruga anaikkonum - andha

inbamaana kaalam inre ippo vara veenum


anbe unakku nilavai kaatti annam ootta venum - nee

aattam kaatti oattam oadi alaikazhikka venum

amma enru oadi vandhen kannai poththa venum - andha

aanandhaththil Shankara naan ennai marakkonum


oadi oadi kalaiththa kaalgal naan pidikka venum

uchchi mudhal paadham varai utru paarkka venum

thaalaattukkal paadi unnai uranga vaikka venum - en

thangam unakku yaar kann padumo dhrushti kazhikkonum


கண்ணா உன்னைத் தேடித் தேடிக் கண்டு பிடிக்கோணும்

கண்ணில் வைத்து இமையால் மூடி பாதுகாக்க வேணும்

பொன்னே உந்தன் புழுதி படிந்த மேனி துடைக்கோணும்

பூப்போல நான் உனை நீராட்டிப் பொட்டு வைக்க வேணும்


பச்சைப் பட்டு இடையில் கட்டிப் பார்த்து பூரிக்கோணும்

பச்சைப்புள்ள உன்னை நான்தான் அலங்கரிக்க வேணும்

தலையை வாரிக் கொண்டை போட்டுப் பீலிசூட்ட வேணும்

தாவி வரும் கால்களில் தண்டை கலீர் என்க வேணும்


காதுகளில் குண்டலம் ஆட ஓடி வர வேணும்

கழுத்தில் ரத்ன ஹாரம் சூட்டிக் கண்டு ரசிக்கோணும்

நெற்றியிலே சுட்டி வைத்து நின்று பார்க்க வேணும்

நீல மேனி அழகினிலே நான் நெஞ்சம் உருகோணும்


கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கையைப் பிடிச்சு வருடோணும்

கொஞ்சும் உந்தன் மழலைப் பேச்சைக் கேட்டு ரசிக்கோணும்

இடுப்பில் உன்னைத் தூக்கி வைத்து இறுக அணைக்கோணும் - அந்த

இன்பமான காலம் இன்றே இப்போ வர வேணும்


அன்பே உனக்கு நிலவைக் காட்டி அன்னம் ஊட்ட வேணும் - நீ

ஆட்டம் காட்டி ஓட்டம் ஓடி அலைக்கழிக்க வேணும்

அம்மா என்று ஓடி வந்தென் கண்ணைப் பொத்த வேணும் - அந்த

ஆனந்தத்தில் சங்கரா நான் என்னை மறக்கோணும்


ஓடி ஓடிக் களைத்த கால்கள் நான் பிடிக்க வேணும்

உச்சி முதல் பாதம் வரை உற்றுப் பார்க்க வேணும்

தாலாட்டுகள் பாடி உன்னை உறங்க வைக்க வேணும் - என்

தங்கம் உனக்கு யார் கண்படுமோ திருஷ்டி கழிக்கோணும்

 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page