Kanna paramathma
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Kanna paramathma endhan kanna paramathma
kanne Sivashankar nee en kanna paramathma
ennamellaam un ninaive kanna paramathma
ezhundhu nadai podudhadaa kanna paramathma
kuzhalisaithu varugaiyile kanna paramathma - en
kudhoogalam solla pomo kanna paramathma
mazhalai sol ketkaiyile kanna paramathma - en
manamellaam perumaiyadaa kanna paramathma
akroorar pinne senraay kanna paramathma - nee
amma meendum varuvenenraay kanna paramathma
paarththa vizhi pooththadhadaa kanna paramathma - solla
vaarthai ezhavillaiyadaa kanna paramathma
chinna idhazh punnagaiyil kanna paramathma - en
selva unai kandu konden kanna paramathma
vandu vizhi kurumbinile kanna paramathma - naan
vaitha kangal meelavillai kanna paramathma
suttum viralasaivil kanna paramathma
suzhalumada yezhulagum kanna paramathma
katti vitten unnai anbaal kanna paramathma - ennai
vittu poga mudiyaadhadaa kanna paramathma
sundhara shyamalane kanna paramathma - nee
sooththira dhaariyada kanna paramathma - en
antharaathma ninaippadhellaam kanna paramathma - nee
ariyaadhadhedhum undo kanna paramathma
கண்ண பரமாத்மா எந்தன் கண்ணபரமாத்மா
கண்ணே சிவசங்கர் நீ என் கண்ணபரமாத்மா
எண்ணமெல்லாம் உன் நினைவே கண்ணபரமாத்மா
எழுந்து நடை போடுதடா கண்ணபரமாத்மா
குழலிசைத்து வருகையிலே கண்ணபரமாத்மா - என்
குதூகலம் சொல்லப் போமோ கண்ணபரமாத்மா
மழலைச் சொல் கேட்கையிலே கண்ணபரமாத்மா - என்
மனமெல்லாம் பெருமையடா கண்ணபரமாத்மா
அக்ரூரர் பின்னே சென்றாய் கண்ணபரமாத்மா - நீ
அம்மா மீண்டும் வருவேனென்றாய் கண்ணபரமாத்மா
பார்த்த விழி பூத்ததடா கண்ணபரமாத்மா - சொல்ல
வார்த்தை எழவில்லையடா கண்ணபரமாத்மா
சின்ன இதழ்ப் புன்னகையில் கண்ணபரமாத்மா - என்
செல்வன் உனைக் கண்டு கொண்டேன் கண்ணபரமாத்மா
வண்டு விழிக் குறும்பினிலே கண்ணபரமாத்மா - நான்
வைத்த கண்கள் மீளவில்லை கண்ணபரமாத்மா
சுட்டும் விரலசைவில் கண்ணபரமாத்மா
சுழலுமடா ஏழுலகும் கண்ணபரமாத்மா
கட்டி விட்டேன் உன்னை அன்பால் கண்ணபரமாத்மா - என்னை
விட்டுப் போக முடியாதடா கண்ணபரமாத்மா
சுந்தர ஷ்யாமளனே கண்ணபரமாத்மா - நீ
சூத்திர தாரியடா கண்ணபரமாத்மா - என்
அந்தராத்மா நினைப்பதெல்லாம் கண்ணபரமாத்மா - நீ
அறியாததேதும் உண்டோ கண்ணபரமாத்மா
Comments