top of page

Kangalai moodi

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kangalai moodi amarvadhu thavamalla

kaingaryam seithal thavam

karuththile saththiyam kudi kollumaayin

kanaththile pookkum thavam

thannai arivadhil dhaagam kondorile

thaane kaniyum thavam

mannile ponnile mayakkangal vaaraadha

maanbonre meimai thavam


matravar thunbaththai than thuyaraay kollum

manappaangu uyarndha thavam

manadhaara theemaigal pirarukku seyyaamai

manu dharmam sollum thavam

maalai anivippinum mann vaari thootrinum

maaraadhu unmai thavam

maa paaviyaayinum mannippu tharuginra

maalaadha anbe thavam


pattaiyo naamamo padhikkinra kuri yedhum

paaraamal vilaiyum thavam

pakkuva unavo pazham soro ilai eninum

pasikkunavaagum thavam

kaavi uduththi kaadugalil thirivadhaal

kai koodaadhu thavam

aaviyai iraivanin adiyil kidaththu

agappadum unakkum thavam


suga dhukkam onraay yerkinra nenjile

sulabamaay vilaiyum thavam

sooththirangal thedi saaththiram paarpporkku

sikkumo iyalbu thavam

dhaana dharmangal thayangaadhu seivoorul

thaane kuviyum thavam - en

thalaivan Sivashankarudan naam vaazhum porkaalam

thaai thandhai seidha thavam



கண்களை மூடி அமர்வது தவமல்ல

கைங்கர்யம் செய்தல் தவம்

கருத்திலே சத்தியம் குடி கொள்ளுமாயின்

கணத்திலே பூக்கும் தவம்

தன்னை அறிவதில் தாகம் கொண்டோரிலே

தானே கனியும் தவம்

மண்ணிலே பொன்னிலே மயக்கங்கள் வாராத

மாண்பொன்றே மெய்மைத் தவம்


மற்றவர் துன்பத்தை தன் துயராய் கொள்ளும்

மனப்பாங்கு உயர்ந்த தவம்

மனதார தீமைகள் பிறருக்கு செய்யாமை

மனுதர்மம் சொல்லும் தவம்

மாலை அணிவிப்பினும் மண்வாரி தூற்றினும்

மாறாது உண்மைத் தவம்

மாபாவியாயினும் மன்னிப்பு தருகின்ற

மாளாத அன்பே தவம்


பட்டையோ நாமமோ பதிக்கின்ற குறியேதும்

பாராமல் விளையும் தவம்

பக்குவ உணவோ பழஞ்சோறோ இலை எனினும்

பசிக்குணவாகும் தவம்

காவி உடுத்தி காடுகளில் திரிவதால்

கை கூடாது தவம்

ஆவியை இறைவனின் அடியில் கிடத்து

அகப்படும் உனக்கும் தவம்


சுக துக்கம் ஒன்றாய் ஏற்கின்ற நெஞ்சிலே

சுலயமாய் விளையும் தவம்

சூத்திரங்கள் தேடி சாத்திரம் பார்ப்போர்க்கு

சிக்குமோ இயல்பு தவம்

தான தர்மங்கள் தயங்காது செய்வோருள்

தானே குவியும் தவம் - என்

தலைவன் சிவசங்கருடன் நாம் வாழும் பொற்காலம்

தாய் தந்தை செய்த தவம்

 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comentarios


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page