top of page

Kandu kondenadi

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Kandu kondenadi mannadiyil

kaliyuga dheivamadhai - namai

kaakkave udhiththa Sivashankarenum

kalki avadhaarathai

anru arangaththil kandirundha avan

azhagu thirumugathai

inru kannedhiril kaana thandha

iraiyin dharisanathai


pralaya kaalam thanil boomiyai yendhi

oar meenaay midhandhavanai

sidhari veezhndha marai saagamale vaayil

undu umizhndhavanai

udal meedhu mandhara malai thanai thaangiya

koorma avadhaaranai

kadalukkul maraitha ulaginai meetka

varaahamaay vandhavanai


bakthan prahaladhan sorpadiye thoonil

vandha narasimmanai

meththa thalaikkanam konda iraniyan

kudalai vagirndhavanai

moonradi mannthanai dhaanamaay kettu

keezhmel ulagalandhu

moonraavadhadiyai maavali sirameedhil

vaitha sri vaamananai


thandhaiyin vaakkinai kaathu peyar petra

sri parasuramanai

dhasaradhan maganaagi dharmathai sthaabikka

vandha raguramanai

mannodu vaanamum ennulle dhaanenna

visva roopameduththu

ennai charanadai unnai kaappen ena

vaakkaliththa krishnanai


aasaiye thunbathin kaaranam enradhai

agatrida sonnavanai

ahimsaiyai bodhikkum avadhaaranaay vandha

sri budhdhanam dhevanai

ovvoru uyirilum uraiginra iraimaiyai

unarththiya en aiyanai - namai

kavvum vinaigalai kaalaal idaridum

kalki avadhaaranai


கண்டு கொண்டேனடி மண்ணடியில் கலியுக தெய்வமதை - நமைக்

காக்கவே உதித்த சிவசங்கரெனும் கல்கி அவதாரத்தை

அன்று அரங்கத்தில் கண்டிருந்த அவன் அழகுத் திருமுகத்தை

இன்று கண்ணெதிரில் காணத்தந்த இறையின் தரிசனத்தை


ப்ரளய காலந்தனில் பூமியை ஏந்தி ஓர் மீனாய் மிதந்தவனை

சிதறி வீழ்ந்த மறை சாகாமலே வாயில் உண்டு உமிழ்ந்தவனை

உடல் மீது மந்தர மலைதனைத் தாங்கிய கூர்ம அவதாரனை

கடலுக்குள் மறைத்த உலகினை மீட்க வராஹமாய் வந்தவனை


பக்தன் ப்ரஹலாதன் சொற்படியே தூணில் வந்த நரசிம்மனை

மெத்த தலைக்கனம் கொண்ட இரணியன் குடலை வகிர்ந்தவனை

மூன்றடி மண்தனைத் தானமாய்க் கேட்டுக் கீழ்மேல் உலகளந்து

மூன்றாவதடியை மாவலி சிரமீதில் வைத்த ஸ்ரீ வாமனனை


தந்தையின் வாக்கினைக் காத்துப் பெயர் பெற்ற ஸ்ரீ பரசுராமனை

தசரதன் மகனாகி தர்மத்தை ஸ்தாபிக்க வந்த ரகுராமனை

மண்ணோடு வானமும் என்னுளேதானென விஸ்வரூபமெடுத்து

என்னைச் சரணடை உன்னைக் காப்பேன் என வாக்களித்த க்ருஷ்ணனை


ஆசையே துன்பத்தின் காரணம் என்றதை அகற்றிடச் சொன்னவனை

அஹிம்சையை போதிக்கும் அவதாரனாய் வந்த ஸ்ரீ புத்தனாம் தேவனை

ஒவ்வொரு உயிரிலும் உறைகின்ற இறைமையை உணர்த்திய என் ஐயனை - நமைக்

கவ்வும் வினைகளைக் காலால் இடறிடும் கல்கி அவதாரனை


 
 
 

Recent Posts

See All
Kaadhal kondenadi

Audio: https://drive.google.com/file/d/1GLPMCIy5p9rQjSWOXZGMRHecmlGjUIgY/view?usp=sharing Kaadhal kondenadi nee en kaaviyam aanaayadi -...

 
 
 
Kaadhal pirakkudhada

Audio: https://drive.google.com/file/d/1LihvqJZDVWoR0ZlFQHufflE23tiOx-BQ/view?usp=sharing Kaadhal pirakkudhada undhan kangalai...

 
 
 
Kaadhalaagi kasindhu

Audio: https://drive.google.com/file/d/129Hl8xbnl4uwNbA8X1SuszdiuQ8tcWmo/view?usp=sharing Kaadhalaagi kasindhu urugi kaaladiyai charan...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page