Kandha Enrazhaiththu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
கந்தா என்றழைத்து விட்டால் காட்சி தர வந்திடணும்
கருணை சிவசங்கரனே வரங்கள் அள்ளித்தர வேணும்
முருகா என்றழைத்தால் உருகி நீ வரவேணும்
முல்லையாம் இதழசைத்து முத்தான கவி தரணும்
வேலவா என்றழைத்தால் விரைந்தோடி நீ வரணும்
வீரமிகு தோளழகா வெற்றிகளைத் தரவேணும்
ஆறுமுகா என்றழைத்தால் அழகுமயில் மேல் வரணும்
ஆசைகளை வேரறுத்து ஆறுதலைத் தந்திடணும்
குருகுஹா என்றழைத்தால் குறையெல்லாம் தீர்த்திடணும்
குரலுக்கு எதிரொலியாய்க் குதித்தோடி நீ வரணும்
ஷண்முகா என்றழைத்தால் சத்கதியைத் தந்திடணும்
சாவு என்னைத் தீண்டு முன்னே சாய உந்தன் மடி தரணும்
Comments