Kananai Kaanavillai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
கண்ணனை காணவில்லை கண்டு சொல்லடி - அவன்
குணநலனை கூறுகிறேன் குறித்து கொள்ளடி
வேங்குழல் ஊதுவான் அதிகாலை நேரம்
ஏங்கிடுவார் பலரும் யமுனா தீரம்
செக்கர் நிற பட்டொன்று இடையாடும் - அங்கே
செருகிய குழல் ஒன்று இடம் தேடும்
அக்கம் பக்கம் பார்த்து பார்த்து அறைக்குள் ஓடி
அள்ளி அள்ளி பருகிடுவான் உறி தேடி
வண்ண நிற தோகை ஒன்று சிரசாடும் - அந்த
வட்ட முகம் கண்டிடத்தான் மனம் நாடும்
மண் நிறைந்த வாயினுள்ளே மண்டலம் காட்டுவான்
மறைந்து மறைந்து மறைந்து எங்கள் மனதை வாட்டுவான்
Commenti